பக்கம்:மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

மாமி மகள் ஜைனப நாச்சியாரையும் அவருக்குத் திருமணம் செய்து வைத்தார்கள் பெருமானார்.


17. முதல் அறிவிப்பு-"ஓதுவீராக!"

ஒரு சமயம் பெருமானார் அவர்கள், ஹிரா குகையில் ரமலான் மாதம் திங்கட்கிழமை ஆண்டவனுடைய வணக்கத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.

அப்பொழுது பேரொளி ஒன்று உதயமாயிற்று; ஓருருவம் தோன்றி, "முஹம்மதே! ஓதுவீராக!" என்று கூறியது.

உடனே பெருமானார் அவர்கள் "நான் ஓதுபவன் அல்லனே (எனக்கு ஒதத்தெரியாதே)" என்று கூறினார்கள்.

அப்பொழுது அந்த தேவதூதர் அரபி மொழியில் வேத வசனங்கள் சிலவற்றை ஓதினார்.

அவற்றின் கருத்து:

"எல்லாவற்றையும் படைத்த இறைவனின் திருப்பெயரால் ஓதுவீராக! அவனேதான் மனிதனை இரத்தக் கட்டியிலிருந்து படைத்தான். ஓதுவீராக! உம் இறைவன் மாபெரும் கொடையாளி. அவனே எழுதுகோல் மூலமாகக் கற்றுக்கொடுத்தான்: மனிதனுக்கு அவன்