ராஜம் கிருஷ்ணன்
57
பகிர்ந்துகொண்டு செல்லும் சென்னை— விழுப்புரம் சாலையும்கூட. அந்த ஊருக்குள் புழுதி படிந்திருக்காது. தன்னந்தனியாக வீட்டைவிட்டு இறங்கிக் கூடப் பழகியிராத அவள் எந்தெந்த வண்டிகளோ ஏறி, இறங்கி, முன்பின் தெரியாத புதுமைகளை, அச்சங்களை, அவமானங்களைப் பரிச்சய மாக்கிக் கொள்ளத் துணிந்திருக்கிறாள். முதல் நாள் இரவே செங்கற்பட்டை அடைந்த அவள், இரவு ரயில் நிலையத் திலேயே உட்கார்ந்திருந்தாள். காலையில் முதல் பஸ் அவளை ஊர் எல்லையில் இறக்கிவிட்டிருக்கிறது. தலையில் முக்காடு போட்டுக் கொண்டு கையில் பையுடன் விரைந்து நடக்கை யில் அவளை யாருமே கவனிக்கமாட்டார்கள் என்பதில்லை. கிராமங்களில் பரிச்சயமான முகங்கள் இனம்புரியாக் கும்பலின் புள்ளிகளாக மறைந்துவிட முடியாது. ஆனால் அவள் யாரையும் பார்க்க விரும்பவில்லை.
அவர்களுடைய வீடு ஊரோடு ஒட்டிய சந்நிதித் தெருவிலோ குளக்கரையைச் சுற்றிய தெருக்களிலோ இல்லாதது எவ்வளவு நன்றாக இருக்கிறது. அந்தக் காலத்தில் வெள்ளைத் துரைபோல் வாழ்க்கை நடத்திய அவள் தந்தை, தன் பழக்க வழக்கங்களால் உறவினர், தெரிந்தவர் வாயில் விழுந்து புறப் படக் கூடாதென்று, ஊரைவிட்டுத் தன் ஒய்வு மாளிகையைச் சமைத்துக்கொண்டார். நெல்வயல், தென்னை, மா, பலா மரங்கள் பூஞ்செடிகள் சூழ்ந்திருக்க, அவ்வீடு, கிழக்கிந்தியக் கம்பெனிக் காலத்தில் யாரோ துரைமகன் கட்டிக் கொண்டதுதான். அவளுடைய அப்பா அதை வாங்கிப் புதுப்பித்து வசதிகள் செய்து கொண்டாராம். அந்த நாட்களில் அவளுடைய தாய் அங்கு வந்ததே கிடையாதாம். அவர் காலம் கடந்து ஒரு அழகியைத் தாரமாக்கிக் கொண்டதும் அவளை அந்த வீட்டில் வைக்கக் கருதியிருந்தாராம். ஆனால் அந்த நாகரிக நங்கை அந்தக் கிராமம் பிடிக்கவில்லை என்று மறுத்துவிட்டதால் கீழ்ப்பாக்கத்திலிருந்த பெரிய பங்களாவை விட்டுத் தாயையும் குழந்தைகளையும் கிராம வீட்டுக்கு அனுப்பிவிட்டு, அவர் அந்தப் பங்களாவிலேயே அவளுடன் வாழ்ந்தாராம். மைத்ரேயி அந்த பங்களாவைக் கண்ணாலும்