பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

21



“இன்றைய ஏழாம் நாள் மங்கைக்குச் சுயம்வரம்” என்று செய்தி செப்பினான். “எங்கும் முரசு அறைக” என்று ஏவினான். அரசர்களுக்குத் தனித்தனியாகத் தூது அனுப்பினான்.

எங்கும் உள்ள அரசர்கள் தங்கு தடை அற்று அங்கு வந்து மொய்த்தனர். சந்திரன் சுவர்க்கி என்னும் அரசன் அவன்மீது பாடப்பட்ட தமிழ்ப் பாக்கள் எண்ணற்றவை. அவற்றைப் போல் இம்மன்னர்கள் பலரும் அங்கு வந்து சேர்ந்தனர்.

வந்தவர்கள் அங்கங்கே இருந்த மாளிகைகள், சத்திரங்கள், மன்றங்கள் எல்லாம் நிறைத்துவிட்டனர். மேலும் தங்குவதற்கு இடமில்லாமல் பறவைகள் தங்கும் சோலைகளிலும், தாமரைத் தடாகக் கரைகளிலும், உள்ளும் புறமும் இனிது தங்கினர். அவரவர் தம் மனத்தில் தமயந்தியை வைத்துப் பூசித்தவர்கள் போல் அவள் நினைவில் கிடந்தனர்; அவள் நினைவாக வாழ்ந்தனர்; கனவுக் கன்னியாக அவள் அவர்கள் நெஞ்சில் இடம் பெற்றாள்.

நீண்ட ஆகாயத்தில் மேகங்களைக் கிழித்துக் கொண்டு அன்னம் வர நளன் அதனைக் கண்டான். அவன் அது வரும் வழியில் விழி வைத்தான். அதன் சொற்கேட்கக் காதுகளைக் கூர்மைப் படுத்திக் கொண்டான்; அவள் காதல் மயக்கத்தில் நெஞ்சினை ஒடவிட்டான்; வழிமேல் விழி வைத்து அவள் காதல் மொழிமேல் செவி வைத்து மோகச் சுழிமேல் நெஞ்சு ஒட வைத்தான்.

அன்னத்தின் சொற்களைக் கேட்க ஆவல் மிக்கவன் ஆயினான். செல்வரை அணுகும் வறியவர் மனநிலையை அவன் பெற்றான். அன்னத்தின் முகம் பார்த்து அதன் அருள்நோக்கி, உள்ளம் அறிய ஆவலாய் நின்றான். காதல் உரைகளைக் கேட்பதில் ஆர்வம் காட்டினான். தான்