பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

141


5. கற்றூண் அரச ஆணைகள் ஏழு : இவை முன்னர் கூறிய பதினான்கு பாறைக் கல்வெட்டு ஆணைகளின் பிற் சேர்க்கை என மதிக்கும் வகையில், அவற்றில் கூறியனவற்றையே மேலும் வற்புறுத்துகின்றன. -

6. கற்றூண் அரச ஆணைகளின் தொடர் ஆணைகள் : இவ்வாணை அடங்கிய கல்வெட்டுக்களின் பொருள் இனிது விளங்காத வகையில், இவை பெரிதும் சிதைந்து விட்டன.

7. சிறுபாறைக் கல்வெட்டாணைகள் : அசோகன் ஆட்சி ஆண்டு நாற்பத்திரண்டில் வெளியிடப்பட்ட இவற்றில் அறிவிக்கும் செய்திகள் புரியாத புதிராகவே உள்ளன.

8. பாப்ரா அரச ஆணை : ஆட்சியின் இறுதிக் காலத்தில் துறவு நிலை மேற்கொண்ட அசோகன், இராஜ புதான மலைகளில் இருந்த ஒரு புத்தப் பள்ளியிலிருந்து, புத்த மதத் துறவிகளுக்கு, புத்தன் போதித்த ஒழுக்க நெறி நிற்கவும், அவன் அறிவித்த அருள் அறநெறி முறைகளை ஆராய்ந்து அறியவும் அறிவூட்டிய ஆணை அடங்கிய இக்கல்வெட்டு, புத்த சமயத்தின் பெருநிதியாகும்.

சிறு பாறைக் கல்வெட்டு ஆணையில் வரும். “இச்செய்திகள் மண்டலத் தலைவர்களுக்கு அனுப்பப் பெறுகின்றன; அவர்கள், இவற்றை நாட்டு மக்களுக்குப் பறை சாற்றி அறிவித்தல் வேண்டும். சமய ஆசிரியர்கள், இவற்றைத் தங்கள் மாணாக்கர்களுக்கு அறிவூட்டுதல் வேண்டும். இவற்றைக் கற்றறிந்தவர்கள், இவற்றில் அடங்கிய செய்திகளைக் கல்லாத தம் சுற்றத்தார்க்கு அறிவித்தல் வேண்டும்” என்ற தொடர், இக் கல்வெட்டு ஆணைகளை அக்கால மக்கள் எவ்வாறு பயன் கொண்டார்கள் என்பதைத் தெரிவிக்கிறது.

அருள்நெறி உண்மைகளை, அரசியல் ஆணையாளர் வழியாகவும், கற்பாறைகளிலும், கற்றுாண்களிலும்