பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 11 சோம்பல் மிகக் கெடுதி, தாய் சொன்ன சொல்லைத்தட்டாதே, உயிர்களிடத்தில்அன்பு வேணும். வயிரமுடைய நெஞ்சு.வேனும் என்று எக்காலத்திற்கும் பொருந்துவத்ான பொதுக்கருத்துக்களை, நெறிகளை எடுத்துக்கூறுகிறார். so புதிய ஆத்திசூடி என்னும் தலைப்பில், அச்சம் தவிர், ஆண்மை தவறேல், உடலினை உறுதி செய், எண்ணுவது உயர்வு, ஏறுபோல் நட, ஐம்பொறி ஆட்சிகொள், ஒய்தல் ஒழி, கூடித்தொழில் செய், கொடுமையை எதிர்த்து நில், செய்வது துணிந்து செய்,தியோர்க்கு அஞ்சேல், நன்று கருது, நேர்படப்பேசு, புதியனவிரும்பு, யாரையும் மதித்து வாழ், வீரியம் பெருக்கு, வேதம் புதுமை செய், முதலிய பழயன புதியன வான நெறிகளை எடுத்துக் கூறுகிறார். == பாரத நாடு என்னும் பாடலில் 'பாருக்குள்ளே நல்ல நாடு' என்று தொடங்கி, ஞானம், பரமோனம், உயர்மானம், கானம், தீரம், பட்ைவிரம், நெஞ்சில் ஈரம், நன்மை, உடல் வன்மை, செல்வப்பன்மை, மறத்தன்மை, கற்பு, ஆக்கம், தொழில் ஊக்கம், புயவிக்கம், உயர்நோக்கம், வண்மை, உளத்திண்மை, மதிநுண்மை, முதலியபண்புகளைப் பொதுமைப் படுத்தி பாரத நாட்டினைப்பெருமைப்படுத்திப் பேசுகிறார். இவை எக்காலத்திற்கும் பொருந்தும் பண்புகளாகும். இந்து பண் பாட்டு தளத்தில் சிறப்பு தர்ம ங் களாக த ரிைத் தன் ைம ய | ன கட ைமகளாக ஆ. சி ர ம தர்ம ங் கள் விவரிக்கப்பட்டிருக்கின்றன. ஆசிரமங்கள் என்பது, பிரம்மச்சரியம், கிரகஸ்தம், வனப்பிரஸ்தம், சந்நியாசம், என்று நான்கு பிரிவுகளாக விரிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு மனிதன் பிறந்து குழந்தைப் பருவம் முடிந்தவுடன் மாணவப்பருவம் தொடங்குகிறது. மாணவப்பருவம் (பிரம்மச்சரியம்) முடிந்த பின்னர், கிரகஸ்தம் (இல்லறம்) தொடங்குகிறது. இல்லற ஆசிரமம் முடிந்த பின்னர், வாழ்க்கையின் நேரடிப்பொருப்புகளிலிருந்து படிப்படியாக விலகி அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டி உதவி செய்யும் வனப்பிரஸ்தம் தொடங்குகிறது. வனப்பிரஸ்தப்பணிகள் முடிந்த பின்னர் வாழ்க்கைச் சுமைகளை விடுவித்துக் கொண்டு சந்நியாசம் அதாவது முழுமையான துறவறம் கொண்டு, இறுதியில் மோட்சம் (விடு பேறு) வாழ்க்கையிலிருந்து முழுவிடுதலை பெறவேண்டும், என்பதை இந்து தர்ம சாத்திரங்கள் விளக்கிக் கூறுகின்றன.