பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.டி.அ தொல்காப்பியம் - பொருளதிகாரம்

நச்சினார்க்கினியம் :

இது பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே, (தொல், பொ. 105) என்ற சிறப்புடைப்பெருந்திணையன்றிப் பெருந்திணைக் குறிப்பாய்க் கந்தருவத்துட்பட்டு வழுவிவரும் ஏறிய மடற்றிறம். (தொல். பொ.51) முதலிய நான்கினுள் ஒன்றாய் முன்னர் நிகழ்ந்த கந்தருவம் பின்னர் வழிஇவந்த தேறுத லொழிந்த காமத்து மிகுதிறம்’ (தொல். பொ. 51) ஆகிய பெருந்திணை வழுவமைக் கின்றது.

ஒதலுந்துதும் ஒழிந்த பகைவயிற் பிரிவாகிய வாளானெ திரும் பிரிவும் முடியுடை வேந்தர்க்கும் அவரேவலிற் பிரியும் அரசர்க் கும் இன்றியமையாமையின், அப் பிரிவிற் பிரிகின்றான் வன்புறை குறித்தல் தவிர்ச்சி யாகும்’ (தொல். பொ. 185) என்பதனாற் கற்புப்போல நீ இவ்வாறொழுகி யான் வருந்துணையும் ஆற்றி யிருவென ஆற்றுவித்துப் பிரிதல் இலக்கணமன்மையின் வாளா பிரியுமன்றே; அங்கனம் பிரிந்துழி அவன் கூறிய கூற்றினையே கொண்டு ஆற்றுவிக்குத் தோழிக்கும் ஆற்றுவித்தலரி தாகலின், அவட்கு அன்பின்றி நீங்கினானென்று ஆற்றாமை மிக்கு ஆண்டுப் பெருந்தினைப்பகுதி நிகழுமென்றுணர்க.

1. சிறப்புடைப் பெருந்தினையென்பன வேதத் துட்க.றப்பட்ட எண் வகைமணங் களுள் பிரமம், பிரா சாபத்தியம், ஆரிடம், தெய்வம் என்னும் கால்வகை மனங் களுமாகும்.

2. பெருந்திணைக் குறிப்பு ஆவண ஏறியமடற்றிறம், இளமை தீர் திறம், தேறுதலொழிந்த காமத்து மிகுதிறம், மிக்க காமத்து மிடல் என முன்னர் அகத்திணை

பியலுட் கூறப்பட்ட கான்குமாகும்.

8. பெருக்திணைக்குறிப்பாகிய இக்கான் கனுள் ஒன்றாகிய தேறுதலொழிந்த காமத்து மிகுதிறம், ஆகிய பெருந்திணை வழு அமைக்கின்றது இச்சூத்திரம் என்பது கச்சினார்க் கினியர் கருத்தாகும். .

4. முன்னர் க் கந்தருவவழக்கத்தோ டொத்த அன்பின் ஐக்தினைக் களவொழுக் கம் ஒழுகிய தலைமகன் காட்டிற்கு இன்றியமையாத பகைவயிற் பிரிந்து செல்ல வேண்டிய நிலையேற்பட கற்பிற்போலத் தலைமகளை வற்புறுத்திப் பிரியும் வாய்ப் பின்றித் தோழிக்கு மட்டுமே பிரிவுணர்த்திப் பிரிந்து சென்றானாகத் தோழியும் அவன் கூறிய மொழிகளையே கூறித் தலைமகளை ஆற்றுவிக்கவும் அவளை ஆற்று வித்தலளிதாகையினாலே தோழி தேற்றவும் தேறுகிலையினளாகிய தலைவி, தலை வன் தன் கண் அன்பின்றி நீங்கினான் என்று ஆற்ற மைமிக்குப் பலரும் அறிய அரற்றி வருக்திய கிலைமைக் கண் தேறுதலொழிந்த காமத்து மிகுதிறமாகிய பெருந்த திணைக் குறிப்புத் தலைமகள்பால் நிகழும் என்பர் கச்சினார்க்கினியர்,