பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. பிருந்தாவனத்தில் கண்ணன்”

வடமதுரை இருப்பூர்தி நிலையத் தங்கும் அறையில் உள்ள நாம் கண்ணன் சிறுவனாக இருந்தபொழுது அவன் விளையாடின இடங்கள், மாடு மேய்த்த இடங்கள், இடைப்பெண்களுடன் சிறு குறும்புகள் செய்த இடங்கள், வளர்ந்தவனான பின்னர் அவர்களுடன் இராசக்கிரீடை செய்த இடங்கள் முதலியவற்றைச் சிந்திக்கின்றோம், இவைதாம் நம்மாழ்வாரின் அநுபவமாகப் பரிணமித்து அவர் தம் இறைய நுபவத்திற்கு வித்திட்டன.

‘பிறந்த வாறும் வளர்ந்த வாறும்

பெரிய பாரதம் கைசெய்து ஐவர்க்குத்

திறங்கள் காட்டிவிட்டுச் செய்து போன

மாயங்களும்’

என்ற பாசுரமும் அத்திருவாய்மொழியிலுள்ள வேறு சில பாசுரங்களும் நம் மனத்தில் குமிழியிட்டு எழுகின்றன. நாமும் நம்மாழ்வாரைப்போலவே எம்பெருமானின் குணாநுபவம் பண்ணவல்லராம்படிப் பண்ணியருள வேண்டும் என்று அவன் திருவடிகளில் சரண் புகுகின் றோம்.

ஒரு சமயம் நஞ்சீயர், ‘ஆழ்வார்கள் யாவரும் கிருஷ்ணாவதாரத்தில் அதிகமாக ஈடுபாடு கொண்டிருப்

  • இது திவ்விய கவியின் நூற் வரிசையில் சேர்க்கப்பெறவில்லை. 1. திருவாய் 5.10:1