அகநானூறு - 1
45
இருந்தாலும் என் தலைவர் அதற்காக அங்குத் தங்காமல் குறித்த காலத்தில் இங்கு வந்து விடுவார்.” என்று ஒரு தமிழ்ப் பெண்மின்னி தன் தோழியிடம் கூறுகிருள்:
' நந்தன் வெறுக்கை பெறிலும்
தங்கலர் வாழி தோழி'
நந்தர் செல்வம் பெற்றவர் என்ற செய்தியைத் தமிழ்ப் பெண் அறிந்திருந்தாள் என்பது இதனுல் தெரிகிறதன்ருே?
அலெக்சாந்தர் படையெடுப்பு
நந்தர்கள் பாடலியை ஆண்டபொழுது அலெக் சாந்தர் என்ற கிரேக்க மன்ன்ன் இந்தியாவின் மீது படையெடுத்தான்; பஞ்சாப் மாகாணத்தில் புரு சோத்தமனுடன் போரிட்டு வென்ருன். அவன் கங்கைச் சமவெளியின்மீது படையெடுப்பான் என்ற செய்தியைக் கேட்ட நவநந்தர் அச்சம் கொண்டனர்; உடனே பாடலி நகரத்தில் ஒன்று கூடி ஆலோசித்தனர். அலெக்சாந்தர் மகத நாட் டின்மீது படையெடுப்பின், தமது செல்வம் அவனி டம் அகப்படாமல் இருக்க வேண்டும் என்ற முடி வுக்கு வந்தனர்; அதனை எவ்வாறு மறைத்து வைக்கக் கூடும் என்று ஆலோசித்தனர்; நீண்ட யோசனைக்குப் பின்பு ஒரு முடிவுக்கு வந்தனர்.
கங்கையாற்றில் *
நந்தர்கள் தங்கள் செல்வத்தைக் கங்கை யாற். றின் அடியில் புதைத்து வைப்பூது என்று முடிவு செய்தனர். ஆற்றின் நடுவில் நீரோட்டத்தை இரு பிரிவுகளாகப் பிரித்தனர்; இரண்டு பிரிவுகளுக்கு டையே இருந்த மணற்பரப்பின்கீழ் உறுதியான் லவரையைக் கட்டினர்; கற்சுவர்களில் ஈயத்தை உருக்கி வார்த்தனர்; இங்ங்ணம் உறுதியாக அமைக் கப் பெற்ற அந்த நிலவரையில் ஐந்து அறைகளைக்