உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய அமுதம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

இலக்கிய அமுதம்


கொண்ட பெட்டியை வைத்தனர்; அப் பெட்டியில் பொன்னையும் மணியையும் நகைகளையும் ဖွံဖြို႕ நிரப்பினர்; நிலவறையை மூடி அம் மூடியின்மீது ஈயத்தை உருக்கி வார்த்தனர்; பின்பு முன் போலவே நீரோட்டத்தை ஒழுங்காகச் செல்ல விடுத்தனர்.

இச் செய்தி சந்திரகுப்தன் வரலாறு என்னும் தெலுங்கு நூலில் குறிக்கப்பட்டுள்ளது. இச் செய்தியை ஒரு தமிழ்ப் பெண் அறிந்திருந்தாள்; அவள், "மிக்க புகழ் வாய்ந்த நந்தர்கள் பாடலி புரத்தில் கூடிக் கங்கையர்ற்றின் அடியில் புதைத்து வைத்த செல்வம், நம் தலைவர் 蠶 காலத்தில் வராமைக்குக் காரணமாக இருக்குமோ?” என்று ஐயப் பட்டாள். இச் செய்தியை அகநானூற்றுப் பாட லொன்று அறிவிக்கின்றது:

' பல் புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்

சீர்மிகு பாடலிக் குழிஇக் கங்கை நீர் முதல் கரந்த நிதியம் கொல்லோ ?"

இத்தகைய பல அரிய செய்திகள் அக்காலத் தமிழ்ப் பெண்கள். அறிந்திருத்தனர் என்பதை அகநானூறு அறிவிக்கின்றது.