உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26


காப்புரை

பிராபாகரம் வக்காணிப்பார்க்குப் பட்ட விருத்திதந்த திருக்குடந்தைச் சாஸனத்தில் ’ஆயிரம் திருவடியு முடையார் ரக்ஷை’ என்று காப்புரை காணப்பெறுகிறது. ஆயிரம் திருவடியு முடையார் என்பது மகாவிஷ்ணுவைக்குறிக்கும் என்றும், புருஷசூக்தத்தில்[1] ஸஹஸ்ர பாத் என்றுள்ளது என்றும், ஆய்வாளர் ஒருவர் கூறியுள்ளார்.[2] ஆனால் இத் தொடர் சிவபெருமானைக் குறிப்பதாகக் கொள்ளுதலே ஈண்டைக்கு ஏற்புடைத் தாகும். என்ன ?

‘ஆயிரம் தாமரை போலும் ஆயிரம் சேவடி யானும்
ஆயிரம் பொன்வரை போலும் ஆயிரம் தோளுடை யானும்
ஆயிரம் ஞாயிறு போலும் ஆயிரம் நீண்முடி யானும்
ஆயிரம் பேருகந் தானும் ஆரூ ரமர்ந்த அம்மானே’

என்ற தேவாரத்துள் அப்பர், ’ஆயிரம் சேவடியான்’ சிவ பெருமான் என்று கூறுவர். இக்காப்புரை சிவபெருமான் திருக்கோயில் சிலைமேலெழுத்தில் காணப்படுதலால் இத் தொடர் சிவபெருமானைக் குறிப்பதாகக் கோடலே சாலவும் பொருந்தும். அன்றியும், ”ஸஹஸ்ர சரணம்” என்று பஸ்மஜாபா லோபநிஷத்தும், ”ஸஹஸ்ரபாத்’’ என்று சுவேதாசுவத ரோபநிமிஷத்தும், ஸுபாலோபநிஷத்தும் கூறுதலின்[3] சிவபெருமானே ஆயிரம் திருவடியு-


  1. புருஷசூக்தம் - ’புரு : எல்லா உயிர்களுடைய இதய குகையில், ஷ : படுத்திருப்பார் ; புர் : எல்லாவற்றிற்கும் முதலில், உஷ : இருப்பவர்’ என்று பொருள் கூறுவர் பெரியோர். இது ரிக்வேதத்திலுள்ள ஒரு மந்திர விசேடம்.
  2. S. I.I. Vo1 III பக்கம் 377.
  3. திரு. ஆர். ஈசுரமூர்த்திப் பிள்ளை எழுதிய ”சிவபரத்துவ நிச்சயம்” காண்க.