உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

129

அமைச்சராகக் கொண்டார் என்றும் சேக்கிழார் புராணத்தில் உமாபதி சிவாசாரியர் பாடியுள்ளார் (செய் 98-99). இனிச் சாசனத்தில் கண்ட பாலறாவாயரும், உமாபதி சிவாசாரியர் கூறிய பாலறாவாயரும் ஒருவரே என்பதற்குத் தடையில்லை.

மாதேவடிகள் : இனித் திருமழபாடிச் சாசனத்தில் கண்ட சேக்கிழார்க்கு மாதேவடிகள், இராமதேவன் என்ற சிறப்புப் பெயர்கள் இருந்தமை அக்கல்வெட்டால் அறியப் பெறுகின்றது. இச் சிறப்புப் பெயர்களை உமாபதி சிவாசாரியர் கூறவில்லை; எனினும், சேக்கிழாருடைய சிவபக்திச் சிறப்புக் கருதி மாதேவடிகள் என்று குறிக்கப்பட்டார் என்னலாம். உமாபதி சிவாசாரியர் 'குன்றை முனி சேக்கிழார்’ என்றும் (செய் 84), *அண்டவாணர் அடியார்கள் தம்முள் அருந் தவந்தனில் இருந்தவர்’ என்றும் (செய்யுள் 100) கூறியிருத்தலால், சேக்கிழாரை மாதேவடிகள் என்று சாசனம் குறித்தது. சாலப் பொருந்தும்.

இராமதேவன் : சாசனத்தில் சேக்கிழாருக்கு இராமதேவன் என்ற பெயருண்மையைக் காண்கிறோம். சாசனத்திலுள்ள முறையைக் காணின் இராமதேவன் என்பது சேக்கிழாரது இயற் பெயராகக் கொள்ளத் தோன்றுகின்றது. இராமதேவன் என்பது வைணவப் பெயராயிற்றே! சிறந்த சிவபக்திச் செல்வம் வாய்ந்த தந்தை வெள்ளியங்கிரியார் இவருக்கு இப்பெயர் அமைத் திருப்பரோ?’ என்ற ஐயம் எழக்கூடும். அறுபான் மும்மை நாயன்மார்களுள் நரசிங்க முனையரையரும், ஒன்பதாம் திருமுறை ஆசிரியர்களுள் புருஷோத்தம நம்பியும் சிவனடிமைத் திறம் உடைய வைணவப் பெய-

9