பக்கம்:மானிட உடல்.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 மானிட உடல் இளம்பிள்ளை வாதம் (poliomyelitis). ஒருவித கிருமிகளால் (virus) உண்டாகிறது; வடிகட்டும் முறையினலேயே இக் கிருமிகளைக் காணலாம். இவை முள்ளந்தண்டிலுள்ள சாம்பல் நிறப் பொருளைப் பாதிக்கின்றன. இந்நோய் பரவும் முறை இன்னும் தெளிவாக அறியப் பெறவில்லை. இன்சுலின் அதிர்ச்சி (insulin shock). உடலிலுள்ள இன்சுலின் அதிகரிப்பதால் உண்டாவது. இதைக் கோமா (Coma) என்றும் வழங்குவ . இது குருதியில் சருக்கரைக் குறைவை உண்டாக்குகிறது. உட்ரிகில் (utricle). உட்செவியிலுள்ள ஒர் அமைப்பு. உயிரணு (cell). உயிர்ப் பொருளின் மிகச் சிறிய பகுதி. இதன் நடுவிலுள்ள பகுதியை உள்ளணு என்றும் அதனைச் சூழ்ந்துள்ள பகுதியை சைட்டோபிளாஸம் என்றும் வழங்குவர். உயிரணுக்கோல்கள் (chromosomes). உயிரணுக்களில் காணப்பெறும் சிறிய உடலிகள்; இவை குடிவழி அலகாம் உயிர் மின்னியைச் சுமத்து செல்வதாகக் கருதப்பெறுகின்றன. உயிர்மின்னி (gene). உயிரணுக்கோலில் அடங்கிக் கிடக்கும் ஒரு குடும்பத்தின் குணம். ஒருவருடைய குடிவழி இதனைப் டொறுத்திருக்கிறது. உள்ள ணு (nucleus). உயிரணுவிலுள்ள நடுப்பகுதி ; உயிரணு விற்கு மிகவும் இன்றியமையாதது. இது நுண்பொடி போன்ற குரோமேட்டின் என்ற பொருளால் ஆனது. வளர்ச்சியும் இனப்பெருக்கமும் உள்ளனுவைப் பொறுத்தது. உள்ளறை (sinus). உடலிலுள்ள எலும்பு அல்லது இழையத் தில் உள்ள குழிவான பகுதி. உள்ளுறுப்பு (organ). இரண்டு அல்லது இரண்டற்கு மேற் பட்ட இழைய வகைகளால் ஒரு திட்டமான முறையிலமைந்த பகுதி , தனிப்பட்ட முறையில் அமைந்து குறிப்பிட்ட செயல் புரிவது. (எ-டு) இதயம், து.ாயீரல். உறை தின நீர் (fibrin). உறைந்த நிலையிலுள்ள குருதி. ஊட்டந்தரும் ஹார்மோன் (tropic hormone). எண்டோ கிரீன் உறுப்புக்களைப் பாதிக்கும் ஹார்மோன். (எ-டு) பாலறி உறுப்புக்களைப் பாதிக்கும் கோனடோட்ரோபிக் ஹார்மோன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/326&oldid=866290" இலிருந்து மீள்விக்கப்பட்டது