பக்கம்:மானிட உடல்.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைச்சொற்கள் (விளக்கக் குறிப்பு) 289 மாங்காய்ச் சுரப்பியின் புறணியைப் பாதிக்கும் அட்ரெனே கார்ட்டிகோ ட்ரோபிக் ஹார்மோன். எண்டோகார்டியம் (endocardium). இதயத்தின் உட்புறத்தி லுள்ள அனைச் சவ்வு. 6rsörGLT Sif sir 3-grúv?4,6ir (endocrine glands). FribLss ளின்றி ஹார்மோன்களைச் சுரக்கும் உறுப்புக்கள். சுரப்புநீர்கள் கோடியாகக் குருதியை அல்லது நிணநீரைச் சாரும். எண்டோதீலியம் (endothelium). குருதிக் குழல்களின் அணைச் சவ்வாக அமைந்திருக்கும் சவ்வின்மீதுள்ள உயிரணுக் களின் அடுக்கு. எண்டோமெட்ரியம் (endometrium). கருப்பையின் உட் புறத்தில் போர்த்திக்கொண்டிருக்கும் மெல்லிதான தோல். மாதவிடாய் ஆன முதல் பதினைந்து நாள்வரை கருப்பையின் உட் புறத்தில் உப்பித் தடித்திருக்கும். கருத்தரிக்கும் முட்டையை வரவேற்றுக் காப்பாற்றுவதற்காகவே இம் மாறுதல் நடைபெறு கிறது. எபிதீலியம் (epithelium). நாரில்லா உயிரணுக்களைக் கொண்ட இழையம். (எ டு) உடலின் மேல் - தோல், இாைப்பையின் சளிச்சவ்வு, ஈரல் நாண்கள் முதலியன. எபினெப்ரின் (epinephrine). மாங்காய்ச் சுரப்பியின் சாறு. எரித்ரோசைட்டிஸ் (erythrocytes). குருதியின் சிவப்பு அணுக்கள். எலக்ட்ரோகார்ட்டின் (electrocortin). இதனை ஆல்டோஸ்டெரோன் என்றும் வழங்குவர். அண்மையில் கண்டறியப் பெற்ற ஹார்மோன். எஸ்ட்ரோஜென் (estrogen). ஸ்டெராய்டு ஹார்மோன்களில் ஒன்று. எஸ்ட்ரோஜென் குற்பைகளில் சுரக்கின்றது. பெண் களின் கொங்கைப் பெருக்கத்திற்கும், எலும்பு முதிர்ச்சிக்கும் முக்கியமானது. உடலில் கொழுப்புப் படிவதற்கும் இன்றியமை யாதது. ஒமெண்டம் (omentum). வபையிலிருந்து முன்முனைபோல் நீண்டிருக்கும் பகுதி ; கொழுப்பால் நிறைந்து வயிற்றிலிருந்து சிறுகுடலின்மீது தொங்கிக்கொண்டிருப்பது. மா. 19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/327&oldid=866292" இலிருந்து மீள்விக்கப்பட்டது