வைணவ மந்திரங்கள்
213
’‘மாற்றிக் கொண்டு இவனுடைய குற்றங்களைப் பொறுப்பது பிராட்டியாருக்காகவே என்பதாகும்.
பிராட்டியார் உலகஉயிர்கட்குத் தாயாக இருப்பதால், இவர்களுடைய துக்கத்தைப் பொறாதவராயும் இருக்கின்றார். பகவானுக்குப் பத்தினியாக இருப்பதால் அம்முறையில் அவனுக்கு இனிய பொருளாக இருக்கின்றார். இக் காராணத்தால் இவர் அருள் நிறைந்த புருஷகாரமாக அமைந்து விடுகின்றார். இதனால் இருவரையும் உபதேசத்தால் திருத்துகின்றார். பூர்வசனபூஷணம் இதனை,
- 'இருவரையும் திருத்துவது
- உபதேசத்தாலே' (12)
என்று பகர்கின்றது.
பிராட்டியார் இறைவனை நோக்கிப் பேசுவது; இவனுடைய குற்றங்களைக் கணக்கிட்டு நீர் இப்படித் தள்ளிக் கதவடைத்தால் இவனுக்கு வேறு ஒரு புகல் உண்டோ? உமக்கும் இவனுக்கும் உண்டான உறவு முறையைப் பார்த்தால் ‘உறவேல்நமக்குஇங்குஒழிக்க ஒழியாது’ (திருப்28) என்றவாறு குடநீர் வழிந்தாலும் போகாதது ஒன்றன்றோ? உடைமையாக இருக்கின்ற இவனை அடைதல் சுவாமியான[1] பேறாக அன்றோ இருப்பது ‘எதிர்சூழல் புக்குத்’ (திருவாய் 2.7.6) திரிகின்ற உமக்கு நான் சொல்ல வேண்டுமோ? காப்பாற்ற வேண்டும் என்று விருப்பத்தோடு வந்த இவனைக் காப்பாற்றாத போது ‘எல்லாப் பொருள்களையும் காப்பவர்’ என்ற உம்முடைய தன்மை குலைந்து போகாதோ? அநாதி காலமாக
- ↑ 10. சுவாமி-சொம்மையுடையவன் சுவாமி, சொம்-சொத்து, உடைமை.