மாணவர்களுக்குப் புறநானுற்றச் சிறுகதைகள்
55
பொருநன் போய் கிணயை இயக்கி அவன் புகழ் பாடினான். விலையுயர்ந்த அணிகளைக் குவித்தான் அம்மன்னன். அவ்வணிகளை சுமந்து வந்து சுற்றத்தார்க்கு அளித்தான் பொருநன் அவர்களோ அத்தகைய அணிகலன்களைப் பார்த்ததே இல்லை. எப்படி அணிவதென்று அறியாது திகைத்தனர். விரலில் அணியவேண்டியதை செவியில் அணிந்தார்கள். காதில் அணியவேண்டியதை கைவிரலில் அணிந்தார்கள். அரைக்குரியதை கழுத்திலும் கழுத்திற்குரியதை அரையிலுமாக அணிந்தனர். கண்டவரெல்லாம் கைகொட்டிச் சிரித்தனர். சீதை விட்டெறிந்த அணிகலன்களைக் கண்டெடுத்த குரங்குகள் அணிந்து அழகு பார்த்த காட்சிபோல் இருந்தது.
பொருநன் முகத்தில் புன்னகை அரும்பியது. சுற்றத்தினர் வறுமைகுயர் அடியோடு தொலைந்தது.
நல்ல வெய்யில். நான் நெடுந்துாரம் நடந்து களைத்துவிட்டேன். மழையில் நனைந்த பருந்தின் சிறகு போன்ற அழுக்குத் துணி, வேர்வையில் என் உடலில் ஒட்டிக்கிடந்தது.
ஒரு பலா மரத்தின் அடியில் இளைப்பாறு வதற்காக அமர்ந்தேன். அப்பொழுது வில்லேந்திய வேட்டுவர் தலைவன் ஒருவன் என்முன் தோன்றினான். அவன் காலிலே வீரக்கழல் ஒலித்தது. அவன் முடியிலே நீலமணி ஒளிர்ந்தது...