உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய அமுதம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. சேக்கிழார் பெருமான்

சேக்கிழார் உழைப்பு

வால்மீகி முனிவர் வடமொழியில் இயற்றிய இராமாயணத்தைத் துணையாகக் கொண்டு கம்பர் தமிழில் இராமாவதாரம் என்றும் பெருநூலைப் பாடி ஞர். இப்படியே வியாசர் எழுதிய பாரதத்தைத் துணையர்க்க் கொண்டு வில்லிபுத்துாரர் தமிழில் பாரதம் பாடினர். ஆணுல் திருத்தொண்டர் புராணம் பாடிய சேக்கிழாருக்கு 9-ஆம் நூற்ருண்டில் வாழ்ந்த சுந்தர்ர், "தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” என்று தொடங்கிப் பாடிய திருத்தொண் டத்தொகை என்னும் நாயன்மார் பெயர்ப் பட்டிய லும், கி. பி. 11-ஆம் நூற்ருண்டின் தொடக்கத்தில் நம்பியாண்டார் நம்பி ஒவ்வொரு நாயனருக்கும் ஒரு செய்யுள் வீதம் பாடிய திருத்தொண்டர் திருவந் தாதியுமே சிறந்த மூலங்கள் என்னலாம். இவற்று டன் நாயன்மார் பாடிய திருமுறைகள், பதினுென் றும் அவருக்குத் துணை செய்தன. - நாயன்மார் அறுபத்துமூவருள், சேர சோழ பாண்டியரும், சிற்றரசரும் சேனைத் தலைவரும் அமைச்சரும் சி ல ராக இருந்தனர். எனவே, பொறுப்புள்ள அவர்தம் வரலாறுகள் சரியான முறையில் தெரிந்து கொள்ள வேண்டிய தேவை சேக்கிழாருக்கு ஏற்பட்டது. அதனால் அவர் அவ்வம் மரபினரைக் கேட்டுப் பல விவரங்களைத் தொகுத் தார். அப்பரும் சம்பந்தரும் சமண பெளத்த போராட்டங்களில் ஈடுபட்டவர். ஆதலால், சமண் பெளத்த சமயக் கொள்கைகளையும் அச்சமயங்களின் வரலாறுகளையும் சேக்கிழார் அறியவேண்டியவரானர். எனவே, அவர்தம் காலத்திலிருந்த சமண பெளத்த நூல்களைக் கற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_அமுதம்.pdf/64&oldid=640746" இலிருந்து மீள்விக்கப்பட்டது