உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 காஞ்சி பி.ப. அண்ணா சுவாமிகள் தவிர சமயச் சொற்பொழிவுகளுக்கும் இசை நிகழ்ச்சி களுக்கும் ஏற்பாடுகள் செய்யப் பெற்றிருந்தன. பிறகு சென்னையில் இவ்விழா பெரிய விழாவாகக் கொண்டாடப் பெற்றது. சென்னை உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதி P.V. இராஜ மன்னார் விழாவினைத் தொடங்கி வைத்தார். நகரில் மிகப் பெரிய கொட்டகை அமைத்து சுவாமியை ஊர்வலமாக அழைத்துச் சென்று கெளரவித்தனர். இவ்விழா ஐந்து நாட்கள் சென்னையில் நடைபெற்றது. பிறகு புது தில்லி மாநகரிலும் இது போலவே சிறப்பாக விழா கொண்டாடப்பெற்றது. மத்திய அமைச்சர்களும் உச்சநீதி மன்ற நீதிஅரசர்களும் விழாவில் கலந்துகொண்டு விழாவிற்குப் பொலிவும் பெருமையும் சேர்த்தனர். சுவாமியின் பேச்சுத் தொண்டு : பேச்சுத் தொண்டு என்று நினைக்கும்போது திரு.வி.க. மறைமலையடிகள், ஞானியார் சுவாமிகள், தந்தை பெரியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம், வாரியார் சுவாமிகள், பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரிய சுவாமிகள் நினைவிற்கு வருகின்றனர். ஒவ்வொருவரும் அவரவர் செய்த பணி அற்புதமாக இருந்தாலும் நம் சுவாமிகளின் பேச்சுத் தொண்டு தன்னிகரற்றது, (1) சென்னைப் பொழிவுகள் : திவ்வியார்த்தத் தீபிகை உரை பருவ இதழ்களில் வெளிவரத் தொடங்கிய காலத்திலிருந்தே சென்னை வாழ் பெருமக்கள் சுவாமிகளின் சொற்பொழிவுகளைக் கேட்க ஆர்வமுற்றனர். M.R.G. நாயுடு என்பார் சுவாமிக்கு திருவல்லிக்கேணியில் நிரந்தர வாசத்திற்கு தக்க இருப்பிடம் ஏற்பாடு செய்வதாகவும் திருவல்லிக்கேணியிலும் பூங்கா நகர்ப் பகுதிகளிலும் சொற்பொழிவுகள் நிகழ்த்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். சுவாமி காஞ்சி தேவப்பெருமாள் கைங்கரியத்தை விட விரும்பவில்லையாதலால் திரு நாயுடு அவர்களின்