பக்கம்:கள்வர் தலைவன்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

荔2 கள்வர் தலைவன் (அங்கம்-2 செள. உண்மையாக எங்களுக்குத் தெரியாது? செளரி. பாலசூரியா! உனக்குத்தெரியும் உண்மையைக்கூறு உங்களைச்சிறையின்றும் விடுவிக்கின்றேன். பா. உண்மையாக எனக்குத்தெரியாது! அப்படித் தெரிங் திருந்த போதிலும் உமக்கு நான் கூறுவேனுே என் பித்ாவைத்தான் நாட்டைவிட்டுத் துரத்தினரே இப் பொழுது அவர் எங்கிருக்கின்ருரென்று கண்டறிந்து இன்னும் ஏதாவது தீங்கு செய்யப்பார்க்கின்றிரோ ? செளரி. பாலசூரியா ! இப்பொழுது உன்னுடன் வார்த்தை யாடிக்கொண்டிருக்க எனக்குக் காலமில்லை, உன் பிதா விருக்குமிடம் உனக்கிப்பொழுது தெரியும்; நீ கூறுவாயா யின் உங்களை யெல்லாம் சிறையினின்றும் விடுவிக்கின் றேன். அம்மணி, உங்களுக்கு சிறையினின்றும் வெளி யேவர வேண்டுமென்று விருப்பமிருந்தால் இதைத் தெரி வியும். என்னசொல்லுகின்றீர்கள் ? செள ஐயோ! எங்களுக்குச்சத்தியமாக ஒன்றும் தெரியாதே! தெரிந்தால் சொல்லமாட்டோமா? ராஜகுமாரா சற்று முன்பாக மனம் இரங்கினிரே,இதற்குள் முன்போலவாகி விட்டீரே ஐயோ! நாங்கள் இச்சிறையில் இன்னும் எத் தனே தினம் அவஸ்தைப்படுவது? இன்னும்சில தினங்கள் இங்கிருப்போமாயின் எங்கள் உயிர் போய்விடும்; இந்த அவஸ்தையில் எப்படி யாவது மனமிரங்கும் ! பா. அம்மா! அவர் நம்மை சிறையினின்றும் விடுவிப்பதற் காகவா வந்தார் என்று நினைத்தீர்?-சிற்றப்பா ! இந்த சூழ்ச்சி எங்கேகற்றீர்?-ஆயினும் சத்தியமாக எனக்கு பிதா இருக்குமிடம் தெரியாது ! செளரி. உன்னை கடைசிமுறை கேட்கிறேன், உனக்குத் தெரியுமென்றெனக்குத்தெரியும், சொல்லுகின்ருயா மாட்டாயா? - பா. கான் தெரிந்ததை முன்பேசொன்னேன். செளரி. பொய்பேசாதே இதே கடைசிமுறை. இப்பொழுது நீ கூருவிட்டால் உன்னிருகண்களையும் பெயர்த்து விடு வேன். ! என்ன, சொல்லுகின்ருயா ! என்ன? பா. எனக்குத் தெரியாது. செளரி. உன்னிடமிருந்து உண்மையை வரவழைக்கும் விதத் தில் வரவழைக்கின்றேன். அடே சேவகர்களே ! நீங்களிருவரும் உள்ளேபோய் பாலசூரியனைப் பிடித்து வாருங்கள் வெளியே! -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கள்வர்_தலைவன்.pdf/56&oldid=779762" இலிருந்து மீள்விக்கப்பட்டது