பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

163


ஆண்டிலே உம்றா நிறைவேற்றச் சென்றவர்களின் எண்ணிக்கை 1,400 என்னும் வரலாற்று உண்மையினை உமறுப் புலவ 'ஆற்றன் மிக்கவராயிர மேலுநா னுாற்றி லக்க முடை யரும்...நபியிற சூலினை...ஈண்டினார், (உம்றாவுக்குப் போன படலம் 6) எனக் குறிப்பிட்டுள்ளார். பெருமானார் (சல்) அவர்கள் உம்றா நிறைவேற்ற மதீனாவ விட்டுச் செல்லுமுன் மதீனாவுக்கும் பொறுப்பாக நுமைலா (றலி) அவர்களை நியமித்தும் சென்றார்கள் என்பது,

"இமய வெற்பென் றிலங்கிய மாடங்க
ளமையுஞ் செல்வ மதீனத்தை பாழ்கென
நுமையி லாவை முன் னோக்கி யுரைத்தவர்
தமைய வூர்க்குத் தனியென வைத்தனர்." [1]

என விவரிக்கப்பட்டுள்ளது.

நபிகள் பெருமானார் (சல்) அவர்களின் வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்புடையதும் இஸ்லாமிய வரலாற்றிலே முக்கியத்துவம் வாய்ந்ததுமான இஸ்லாமிய வரலாற்றிலே ஒரு திருப்பமாகவும் விளங்கிய ஒர் இடம்தான் ஹூதைபியா, இது மக்க மாநகரிலிருந்து ஐந்து மைல் தூரத்தில் அமைந்துள்ளது. கஃபாவின் புனித எல்லையிலே உள்ளது. அண்ணல் நபி (சல்) அவர்களும் தோழர்களும், ஹூதைபியா என்னும் இடத்தை அடைந்தமை சீறாபுராணத்திலே இவ்வாறு வருணிக்கப்பட்டுள் ளது.

"திண்மை மீறிய தீனர்க ளியாவரு
முண்மை சேர்பய காம்பரு மோங்கிய
வண்மை சேர்மக்க மாநக ருக்கரு
கண்மிகச் சேர்ந்தன ராண்டுஹூதைபிய்யா"[2]

இங்கே நபி, தூதர் என்னும் பொருளில் பயகாம்பர் என்னும் பாரசீகச் சொல் உபயோகிக்கப்பட்டுள்ளது. நபிகள்


  1. 1. சீறா. மழையழைப்பித்த படலம் 1
  2. 2. சீறா. உமுறாவுக்குப் போன படலம் 76