ല്യു ശ്ലോ
தாழ்வுயர்வு கற்பிக்கும் தாழ்ச்சி!.
நம் தமிழ்மக்கள் தங்களுக்குள் மேல்கீழ் என்றவாறு பகுத்துக்கொண்டு இயங்கும் கீழ்மையைக் கண்டு மனங் கொதித்து - அவற்றை எதிர்த்து அறிவு விளக்கம் கொளுத்தும் பணியையும் தம் வாழ்நாட் கடமைகளுள் ஒன்றாகச் செய்துவந்த கொள்கையராகிய நம் ஐயா அவர்கள் - இக் கதைப் பாவியத்துள் அதற்கெனப் பல இடங்களைப் பயன்படுத்தியுள்ளார்!
ஒரே வகை உரு; ஒரே வகை உணர்வு; ஒரே வகையிலாகிய இனப் பிறப்பு - இப்படியிருக்கையில், ஒரு சாரரைப் பீழைப் பிறப்பினர் (தவற்றுப் பிறப்பினர் - இழிபிறப்பினர்) என்றவாறு பாகுபடுத்திப் பார்க்கும் மடமையையும் - தாழ்வுயர்வு கற்பிக்கும் தாழ்ச்சியாந் தன்மையையும் தக்க இடங்களிலெல்லாம் அறிவார்ந்த அடிகொடுத்துத் தெருட்டுகின்றார்! பாழ்மைசேர் சாதிப் பகுப்பு.
"கீழ்மைக்கும் கீழ்மையதாய்க் கேடுகட்கும் கேடாகும்
பாழ்மைசேர் சாதிப் பகுப்புகள்..." (1731-1732) என்னும் அரிமாவின் குரலுக்குள் - தம் உள்ளக் குமுறலின் உரறலைப் பதிவு செய்கின்றார், ஐயா அவர்கள்
இவ் வகையிலாகிய குலப்பகுப்பும் மதவகுப்பும் ஒற்றுமைக்கு உலைவைத்துவிடும் - இனத்தை உடையச் செய்துவிடும் என்னும் கருத்துக்கள் பெறுமாறு பல பதிவுகளையும் உரிய இடங்களில் பதிவுசெய்கின்றார்! "விலங்குகளுக்குள் - இவ் வகை வேற்றுமை பாராட்டும்