உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 பால காண் டப் கும் பிள்ளைகள் பிறப்பர். இவ்வாறு குலம் பிரிந்து விரிந்து கொண்டு போகிறது. அது போல், சரயு ஆற்றிலிருந்து பலகிளைகள் பிரிகின்றன. அந்தப் பெருங் கிளைகளிலிருந்து சிறு சிறு கிளைகள் பிரிகின்றன - என ஆற்று வெள்ளம் புனைந்துரைக்கப்பட்டுள்ளது. புதுவெள்ளம் வரும்போது உழவர்கள் பறையடித்து வரவேற்கும் நிகழ்ச்சி, அருணகிரிநாதரின் திருவதிகைத் திருப்புகழிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவதிகையை ஒட்டிச் செல்லும் கெடிலம் என்னும் ஆற்றில் புதுவெள்ளம் பெருகும்போது, உழவர்கள் திமிதிம்-திமிதிம் எனப் பறை அறைந்து மகிழ்வார்களாம்: - 'திமி திம் எனப் பறையறையப் பெருகுபுனல் கெடிலநதித் திருவதிகைப் பதிமுருகப் பெருமாளே” என்பது திருப்புகழ்ப் பாடல். இலக்கிய ஒப்புமையாக இது ஈண்டு தரப்பட்டுள்ளது. அரசியல் படலம் துறவியர் கண்டுகொள்ளும் முறை தமிழகத்தில் மடாதிபதி ஒருவரைக் காணும் மக்கள் கைகூப்பி வணங்கலும், காலில் விழுந்து வணங்குதலும் உண்டு.ஆனால்,ஒரு மடாதிபதி மற்றொரு மடாதிபதியைக் காணும்போது ஒருவரையொருவர் கைகூப்பி வணங்குதல் அரிது. இது போன்ற நிகழ்ச்சி ஒன்று அயோத்தியில் காணப்பட்டது. வசிட்ட முனிவரை மன்னன் தயரதன் வணங்குவான் அயோத்திக்கு வந்த கலைக்கோட்டு முனிவரையும் தயரதன் வணங்கினான். இந்த முனிவர்கள் இருவரும் ஒருவரையொருவர் வணங்கியதாகக் கம்பர் கூற வில்லை. இருவரும் அரசவை அடைந்தனர் என்று மட்டும் கூறியுள்ளார். 'வசிட்டனும் அருமறை வடிவு போன்று ஒளிர் விசிட்டனும் வேத்தவை பொலிய மேவினார்” (74)