பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. உலகியல் நடைமுறைகள் கல்வியில் பெரிய கம்பர் ஏட்டுக் கல்வியுடன் உலகியல் நடைமுறைகளையும் மிகவும் அறிந்தவர். அவற்றைத் தம் நூ லில் அழகாக ஒ வியப் படுத்திக் காட்டியுள்ளார். அவற்றுள், பால காண்டப் பைம்பொழிலின் நிழலில் உள்ள சில பகுதிகளைக் காண்போம். ஆற்றுப் படலம் பறை கறங்கல் ஆற்றிலோ-கால்வாய்களிலோ புது வெள்ளம் வரும் போது உழவர்கள் பறையறைந்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்வது வழக்கம். சரயு ஆற்றிலும் அதன் கிளைகளிலும் புதுவெள்ளம், அலையாகிய கையால் பொன்னையும் முத்தையும் வீசிக்கொண்டு சென்றதாம்; அப்போது உழவர்கள் கிணைப்பறை கொட்டினார்களாம். 'காத்தகால் மள்ளர் வெள்ளக் கலிப்பறை கறங்கக் கைபோய்ச் சேர்த்தநீர்த் திவலை பொன்னும் முத்தமும் திரையின் வீசி நீத்தமாம் தலையதாகி கிமிர்ந்துபார் கிழிய நீண்டு கோத்தகால் ஒன்றின் ஒன்று குலம்எனப் பிரிந்ததன்றே (18) என்பது பாடல். ஒரு குடும்பத்தில் நான்கு பிள்ளைகள் இருந்தால், பின்னர் ஒவ்வொரு பிள்ளைக்கும் பிள்ளைகள் சிலர் பிறக்கின்றனர். பின்னர் அவர்களுள் ஒவ்வொருவர்க்