பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 பால காண்டப் எளிதாகச் சடையப்பர் கம்பரை வளர்த்து உருவாக்க முடிந்தது. இதில் இன்னொரு சிக்கல் இருப்பதாகச் சொல்லப் படுகின்றது. வெண்ணெய் நல்லூர் என்னும் பெயரில் இப்போது தஞ்சை மாவட்டத்தில் ஒர் ஊரும் இல்லை. கதிரா மங்கலம் இரயில் நிலையத்துக்கு வடக்கே உள்ள முப்பெருமான் திடல் என்பதும் அதைச் சார்ந்த இடங் களும் முன்பு வெண்ணெய் நல்லூர் என்று வழங்கப்பட்டன என்பர்'டஎன அண்ணாமலைப் பல்கலைக் கழகக் கம்ப ராமாயணப் பதிப்பில் கூறப்பட்டுள்ளது. மற்றும் பலரும் இக்கருத்தைக் கூறுகின்றனர். இதிலேயும் ஒரு சிக்கல் உள்ளது. மிகப் பெரிய வள்ளலாக வாழ்ந்த சடையப்பரின் ஊர்ப்பெயர் மறையும் படி வேறு பெயர் எவ்வாறு தோன்றியிருக்க முடியும்? என்பது அந்தச் சிக்கல். இதற்கு எளிதில் விடை கூற முடியும். நூல்களின் பெயர்களே ஆசிரியர்கள் வைத்ததற்கு மாறாக மாறியிருப்பதாக மேலே கண்டோம். இவ்வாறு ஊர்களின் பெயர்களும் மாறலாம் அல்லவா? மயிலாடுதுறை மாயூரம் அல்லது மாயவரம் ஆயிற்று. மறைக்காடு வேதாரண்யம் ஆயிற்று. புள்ளிருக்கு வேளுர், வைத்தீசுவரன் கோயில் ஆயிற்று. இப்படியே கூறிக்கொண்டு போனால் இந்தப் பட்டியல் மிகவும் நீளும். எனவே, கம்பர் பிறந்த திருவழுந்துாருக்கு ஒரு தோற்றம்-ஆறு அல்லது ஏழு அல்லது பத்து கி.மீ. தொலைவில் உள்ள கதிரா மங்கலத் தைச் சார்ந்த பகுதி சடையனின் வெண்ணெய் நல்லூரா யிருக்கலாம். ஒரே பெயருள்ள ஊர்கள் பல இருப்பது போலவே, தென்னார்க்காடு மாவட்டத்துத் திருவெண்ணெய் நல்லூர் போன்ற பெயரினதாய்த் தஞ்சை மாவட்டத்திலும் ஒர் ஊர் இருந்திருக்கலாம் அல்லவா? யான் இங்கே கூறுவதே முடிந்த முடிவு அன்று. ஆராய்ச்சியாளர்கள் மேலும் ஆய்ந்து முடிவு காணலாம். இந்தப் பாயிரப் பகுதியை அடுத்து, இனிப் பால காண்டப் பைம்பொழிலுக்குள் சென்று பயன் பெறலாம்.