146
ஆனால் நீடித்த முற்றுகையால் துயர் உற்ற காமூர் வாழ் ஆயர், கழுவுள் அறியாவாறு. சேரர் படைத் தலைவனிடம் திறையளித்துப் பணிந்தனர். ஆயர் செயல் அறிந்த கழுவுள், வேறு வழியின்றி பணிந்தான்.92 பழி துடைக்க வாய்ப்பை எண்ணிக் காத்திருந்தான்.
அரசன் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை இறந்தவுடன். மீண்டும் கழுவுள் காமூரில் தன் ஆட்சியை நிலை நாட்டினான். ஆனால் அரியணையேறிய சேர மன்னன் இளஞ்சேரல் இரும்பொறை படைகொண்டு சென்று கழுவுளைப் புறங்கண்டான்.93
கழுவுளின் புகழ் கண்டு மனம் பொறாத பதினான்கு வேளிர் தலைவர்கள் ஒன்று கூடி காமூரை அழித்தனர், என்பது பரணர் கூற்று.94
45. கொடுமுடி
தொண்டை வளநாட்டு, ஆமூர் கோட்டத்தின் தலைநகரான ஆமூர் தலைவன் கொடுமுடி, பெருவீரன். ஆமூரைக் கைப்பற்ற விற்படை, யானைப் படைகளோடு முற்றுகையிட்டான் சேர மன்னன். அவ்வானவனுடைய யானைப் படையை அழித்து, சேரனை வென்று தலை நகர் காத்த புகழுடையவன் கொடுமுடி.95
46. கொண் கானங் கிழான்
"பொன் படு கொண்கானம்" எனப் போற்றப் பெற்ற மலையைத் தன்னகத்தே பெற்ற நாடு கொண்கானம்96. அக் கொண்கானத்தின் தலைவனே