பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

147

கொண் கானங்கிழான். புலவர் மோசி கீரனாரால் பாராட்டப் பெறும் பெருமை பெற்றவன். பரிசில் நாடி வந்த இரவலர்களாலும், பணிந்து திறை செலுத்தி மீளும் அரசர்களாலும் சூழப் பெற்றிருக்கும் கொற்றமுடையவன் கொண் கானங்கிழான்.97 "ஞாயிறு செல்லும் திசை நோக்கியே செல்லும் நெருஞ்சிப் பூக்களைப் போல, யாழ்ப்பாணர்கள் கொண்கானங் கிழானையே நாடி நிற்பர்.98 நீர் வேட்கை மிக்கார், உண்ணும் நீர் உள்ள இடம் தேடி அலைவது போல பரிசிலர் தம் துயர் தீர்ப்பான் கொண் கானங் கிழான், ஒருவனே என்று அவனைத் தேடிச் செல்வர்"99 என்று அவன் பெருமையை புலவர் பாராட்டியுள்ளனர்.

47. கெளணியன் விண்ணந்தாயன்

சோணாட்டு, பூச்சாற்றுார் ஊரினன். கெளனியைப் பார்ப்பனர் குடியில் வந்தவன். சோனாட்டுப் பூச்சாற்றுார்ப் பார்ப்பான் கெளணியன் விண்ணந்தாயன் என அழைக்கப் பெறுவன். வேள்வி பல செய்தவன். வேள்வி முடிவில் விருந்தளித்துப் போற்றியவன்.100 புலவர் ஆவூர் மூலங்கிழாரால் 'இமயம் போல் என்றும் நிலை பெற்று நெடிது வாழ்க' என வாழ்த்தப் பெற்றவன்.

48. சிறுகுடி கிழான் பண்ணன்

சோணாட்டில், காவிரியின் வடகரையில் அமைந்த ஊர் சிறுகுடி. அச்சிறுகுடி, அச்சிறுகுடியின் தலைவன் பண்ணன் பேராற்றல் பெற்றவன். பகைவர் யானைப்-