முடிவுரை 229 மகோதரன். இராமன் வேத முதற்காரணனா யிருந்ததனாலும், பிறன் மனையாளை நயப்பது பேதைமையாகையாலும், இங்கு மகோதரன் கூறியவை நமக்கு வேண்டாதவைகளாய்ப் படுகின்றன. அவன் காட்டிய வழி வெற்றியைத் தரவில்லை. இதற்காக அவன் கூறிய புத்திமதிகள் பொதுநிலையில் ஆழ்ந்த உண்மைகளை அடிப்படையாகக் கொண்டவை என்பதை நாம் எவ்வாறு மறுக்கக்கூடும்? வீடணன், கும்ப கருணன், மாலியவான் இம்மூவரும் ஒவ்வொரு நிகழ்ச்சியின் தத்துவத்தையும் நன்றாய் அறிந்து கூறும் ஆற்றலும் அறிவும் பெற்றிருந் தனர். ஆனால், இவர்கள் தங்கள் அறிவின் வீக்கங் காரணமாகவே, ‘நாம் இராவணனை விட நன்கு அறிந்துகொண்டிருக்கிறோம்' என்ற செருக்குக் காரணமாகவே, தாங்கள் கூறியவற்றை இராவணனுக்குப் பொருத்த - அவன் ஏற்றுக் கொள்ளும் முறையில் - எடுத்துக் கூறவில்லை. சொல்லும் திறம் அறிந்திருந்த மகோதரனுக்கு, எல்லாவற்றையும் அலசி ஆராயும் திறமையோ அறிவோ இல்லை. அவன் குறிப்பிட்ட சமயத்தில் மணியடிக்கும் அலாரக் கடிகாரத்தைப் போல், சந்தர்ப்பம் நேர்ந்தபோது அரச முறையின் அடிப்படை உண்மைகளைப் பொருத்தம் அறியாமல் ஒப்பித்துக் கொண்டிருந்தான். இவற்றை அவன் வெளிப்படுத்திய விதமே, இராவணன் அக் கூற்றுக்களை ஏற்றுக் கொள்ளுமாறு செய்தது. இவற்றால் இராவணன் அழிவுக்கு அவனே முழுப் பொறுப்பாளி என்றோ அல்லது சூர்ப்பணகை யோ, வீடணனோ, கும்பகருணனோ, மகோதரனோ
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/246
Appearance