38
வேண்டும் விடுதலை
‘தமிழகம் விடுதலை பெறவேண்டும்’ - என்ற கருத்தே நம் நாட்டிலுள்ள அரசியல் கட்சிக்காரர் சிலர்க்குப் பெருத்த எரிச்சலை மூட்டுவதாகும். அதற்கவர் சொல்லும் கரணியங்கள் வியப்பானவையாகும். முதலில் “தமிழகம் எங்குக் கட்டுப் பெற்றுக் கிடக்கின்றது? தமிழகம் உட்பட இந்தியா முழுவதுமே அண்மையில்தானே வெள்ளைக்காரன் கைகளினின்று மீட்கப் பெற்று உரிமை எய்தியது? உரிமை பெற்றபின் நமக்கென்று ஒரு குடியரசமைப்பையன்றோ அமைத்துக் கொண்டுள்ளோம்? இவ்வமைப்பின் கீழ் உள்ள நிலத்தின் எந்தப் பகுதியும் அடிமையுற்றுக் கிடக்கின்றது என்பது பொருளற்றதே. அவ்வாறு அடிமையுற்றுக் கிடக்கும் ஒரு நிலப்பகுதியன்றோ விடுதலையுரிமைக்குப் போராடலாம்? தமிழகம் எப்படி அடிமை நாடாகும்?" - என்பது அவர்களின் எதிர் வினாவாகும். இத்தகையவர்கள் விடுதலை என்ற சொல்லின் பொருளையே சரிவரப் புரிந்து கொள்ளா தவர்களாவர். புரிந்து கொண்டாலும் ஒப்புக்கொள்ளாதவர்களாவர். இத்தகையவர்களுக்கும். இவர் தம் மதிமயக்கமான பேச்சுகளினாம் கட்டுண்டு தமக்குத்தாமே அடிமையுற்றுக் கிடக்கும் பேதைத் தமிழர்க்கும் முதற்கள் விழிப்பூட்டியாகல் வேண்டும்.
ஓராட்சிக்குள் அடங்கும் தனி மாந்தன் ஒருவனின் உரிமைகள் என்பவை வேறு கூட்டுமாந்த உரிமைகள் என்பவை வேறு. வெள்ளைக்காரன் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்தான் என்று சொன்னால் நம் ஒவ்வொருவரின் கைகால்களிலும் இரும்பு விலங்குகளை மாட்டி நம் குடுமிகளைப் பிடித்து அவன் எப்பொழுதுமே ஆட்டிக்