பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - பொருளதிகாரம் ابتدائی الله

(இ-ள்.) ஒருபாற் கிளவி ஒத்த கிழவனுங் கிழத்தியும்" என்றவழி ஆணொருமையும் பெண்ணொருமையும் உணர்த்தி நின்ற சொற்களை ஆசிரியரும் அவ்வாறு ஆண்டாரேனும் அவ் வொருமைச் சொற்கள்; எனைப்பாற்கண்ணும் வருவகைதானே. நால்வகைக்குலத்துத் தலைவரையுந் தலைவியரையும் உணர்த்தும் பன்மைச்சொற்கண்ணே நின்று பன்மைப் பொருள் உணர்த்தி வருங் கூறுபாடுதானே : வழக்கென மொழி.ப - உலகவழக் கென்று சொல்லுவர் ஆசிரியர் (எ - று.)

இதனாற் பயன் உலகத்து ஒரூர்க்கண்ணும் ஒரோவொரு குலத்தின் கண்ணுந் தலைவருந் தலைவியரும் பலரேனும் அவர்களை யெல்லாங் கூறுங்காற் கிழவனுங் கிழத்தியுமென்று ஒருமையாற் கூறுவதன்றி வேறோர் வழக்கின்றென்பதுபற்றி முதனூலாசிரியர் அங்ங்னஞ் சூத்திரஞ் செய்தலின், யானும் அவ்வாறே சூத்திரஞ் செய்தேனாயினும், அச்சொற் பலரையும் உணர்த்து மென வழுவமைத்தாராயிற்று. ஒருவனோடு பலர் கூட்டமுங்கோடற்கு ஏனைப்பாலென்று ஒருமையாற் கூறாது 'எனைப்பா லெனப் பன்மையாற் கூறினார். இதனால் சொல்வழுவும் பொருள் வழுவும் அமைத்தார். ஒத்த கிழவனுங் கிழத்தியும் (93) என்ற ஒருமையே கொள்ளின் அன்னாரிருவர் இவ்வுலகத்துள்ளாரன்றி வேறாக நாட்டிக்கொள்ளப் பட்டாரென்பது பட்டு இஃது உலக வழக்கல். லாததோர் நூலுமாய் வழக்குஞ் செய்யுளும்' (தொல் பாயிரம்) என்பதனோடு மாறுகோடலேயன்றிப் பரத்தை வாயினால்வர்க்கு முசித்தே (தொல், பொ 224) என்றாற்போல்வன. பிற சூத்திரங் சளும் வேண்டாவா மென் றுணர்க." (உ. அ) TiTಾಣ' என்னுஞ்சொல் ஒருமையினையும் எனை' என்னுஞ்சொல் பன்மையினையும் உணர்த்தும். ஏனை யொன்றே தேவர்ப்பரா அய முன்னிலைக் கண்ன்ே என் புழி, ஏனை ஒருமையுணர்த்துதலும், "எ னை வகை யாற் ந்ேதிய்க் கண்ணும் (திருக்குறள். 519) என் புழி, எனை என்பது பன்மை யுணர்த்துதலும் காண்க.

2. அகத்தினையொழுகலாற்றில் ஆண்பாலாரும் 'கிழவன்’ எனவும் பெண் பாலாரும் கிழத்தி எனவும் வழங்கும் பெயர்கள் முறையே அத்தகைய தலை மைப் பண்புடைய தலைவர்களையும் தலைவியரையும் குறித்துப் பன்மைப் பொரு எளிலேயே வழங்குவனவாகும். இவ்வாறன்றி இப்பெயர்கள் தலைவன் 95ುಣ T 46 தலைவி ஒருத்தியையுமே வரைந்து சுட்டுவன எனக் கொண்டால் அவ்வாறு சுட்டப்பெறும் இருவரும் உலகத்தில் இல்லாத தலைவர்களாயப் புலவர்களால் கற்

பனையால் புனைந்து காட்டப் பெற்றவர்களே என்ற தவறான கருத்துண்டாகும். அஃ