பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

丽蒂念_ தொல்காப்பியம் - பொருளதிகாரக்

ஏனைய வந்துழிக் காண்க. உம்மையான், இளையரோடு வந்து தனித்துக் கூடுதலுங் கொள்க.

வல்வில் இளையரோ டெல்லிச் செல்லாது சேந்தனை செலினே சிதைகுவ துண்டோ’’ {அகம் 120) என்றாற்போல்வன கொள்க.

இதனானே உடன்போக்கிலும்,

கடுங்கட் காளையொடு நெடுந்தே ரேறிக் கோள்வல் வேங்கை மலைபிறக் கொழிய வேறுபல் லருஞ்சுர மிறந்தன ளவளெனக் கூறுமின் வாழியோ ஆறு சென் மாக்கள் நற்றோள். நயந்துபா ராட்டி எற்கெடுத் திருந்த அறனில் யாய்க்கே’’ (ஐங்குறு. 385)

எனத்தேர் முதலிய ஏறிப்போதலுங் கொள்க, (ச.அ. .

ஆய்வுரை: இது களவொழுக்கம் ஒழுகும் தலைமகற்குரிய தோர் இயல்புணர்த்துகின்றது.

(இ- ள்) கள வொழுக்கத்தில் ஒழுகும் தலைவர்கள் தாம் தனியே வருதலின்றித் தமக்குரியதேரும் யானையும் குதிரையும் பிறவுமாகிய ஊர்திகளில் இயங்கு தற்கும் உரியர். எ-று

களவொழுக்கம் ஒழுகுத் தலைவர் ஊர்தி முதலியன இன்றித் தனித்துச் செல்லுதலே களவுவெளிப்படாமைக்கு ஏதுவாம் . ஆயினும் தேர் முதலிய ஊர்திகளிலேயே செல்லும் பழக்கமுடைய தலைவர்கள் ஊர் திமுதலியன இன்றித் தனித்துச் செல்வாராயின் அச்செயல் 'ஊர்தியிற் செல்லும் இவர் ஊர்தியின்றித தனித்துக் செல்வது ஏன்' என்ற தோர் ஐயம் ஊர்மக்களிடையே தோன்றிக் களவு வெளிப்படுதற்கும் ஏதுவாமா கலின் தேரும் யானையும் குதிரையும் பிரவும் ஊர்ந்தனர் இயங்க லும் உரியர்' என்றார் ஆசிரியர். ஊர்ந்தனரியங்கலும் என் புழி உம்மை தாம் தனித்துச் செல்லுதலேயன்றி இவ்வாறு ஊர்தியிற் செல்லுதலும் உரியர்' என்னும் பொருள்படவந்தமையின் இறந்ததுதழி இய எச்ச உம்மை

யாகு ம .