உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய அமுதம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

இலக்கிய அமுதம்


விரும்பியதொரு பூவை நாங்கள் பறிக்கக் கூடவில்லை. தலைவி வாட்டமுற்ருள். அப்பொழுது நம்பி ஒருவன் தோன்றி அம்ம்லரைப் பறித்துத் தலைவியின் கையிற் கொடுத்தான். தலைவி அவன்பால் நன்றியறிதல் உடையவள் ஆ யி னு ள். (3) பண்டொரு நாள் யாங்கள் விள்ையாடிக்கொண்டிருந்த போது காட் டான ஒன்று மதங்கொண்டு எங்களை நோக்கி ஓடி வந்தது. தலைவி அலறிஞள். அவளது மையுண்ட கண்களிலிருந்து நீர் அருவிபோலப் பெருகியது. அவ் வமயம் கையில் வேலேந்திய இளைஞனுெருவன் அங்குத் தோன்றிஞன், அச்சத்தால் அலறிய தலைவி யைத் தன் இடக்கையால் அனைத்து நின்று, வலக் கையால் தாங்கிய வேலால் யானையைக் குத்தினன்; யானை பிளிறிக்கொண்டு ஓடியது. தன் உயிரைக் காத்த அத்தலைவன்பால் தல்ைவியின் உள்ளம் ஈடு பட்டது. இங்ங்னம் கூறுதல் முறையே புனல் தரு புணர்ச்சி, பூ த் த ரு புண் ர் ச் சி, களிறுதருபுணர்ச்சி எனப்படும். இங்ங்னம் தோழி கூறுதலை அறத் தொடு நிற்றல் என்று இலக்கணம் கூறும்.

தான் காதல் கொண்ட காதலனுக்குத் தன்னைத் தன் பெற்ருேர் தாராரெனத் தெரிந்ததும், தலைவி தலைவனுடன் ஒடுதல் உண்டு. இஃது உடன் போக்கு எனப்படும். அவன் அவளைத் தன் வீடு கொண்டு சென்று மணம் முடித்துக்கொள்ளலு முண்டு. போகும் பொழுதே தலைவியைச் சேர்ந் தவர் இடைமறித்துக் கொண்டுசென்று தலைவி விட்டில் திருமணம் நடத்தலுமுண்டு. சரியாகக் கூறுமிடத்து, இவ்வுடன்போக்கிலிருந்தே கற்புத் தொடங்கி விடுகிறது. இதன்பின் நிகழ்வதெல்லாம் க ற் பியற் செயல்களெனப்படும். கற்பு-ஒருவன் ஒருத்தியோடு உள்ளம் ஒன்ற வாழ்க்கை நடத்தல்.