1
அந்த எழுத்துச் சுவடிகளையெல்லாம் அச்சு வடிவில் வெளியிடுவதைத் தன் தலையாய கடமையாக எழிலகம் ஏற்று அதன் முதற்கட்டமாக, வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி, 'மனையுறை புறாக்கள்: ஆகிய இரு நூல்களை சென்ற ஆண்டு வெளியிட்டோம். சங்ககால அரசர் வரிசை, திருமாவளவன், அறம் உரைத்த அரசர், இலக்கியங் கண்ட காவலர், கலிங்கம் கண்ட காவலர், தமிழர் தளபதிகள், கழுமலப் போர், தமிழர் வாழ்வு' தமிழர் வாணிகம், பண்டைத் தமிழர் போர்நெறி, தமிழ கத்தில் கோசர்கள், போன்ற வரலாற்று நூற்கள் பல படைத்த புலவர் அவர்கள், சங்ககாலம் தொட்டு இன்று வரையான தமிழர் வரலாற்றை, காலம் தோறும் தொகுத்து வரிசையாக எழுதும் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். அந்தப் பணியும் முற்றுப் பெறாது போனது. அந்தப் பணியில் அவர் எழுதி முடித்த வரலாற்றுப் படைப்புகளை தமிழக வரலாறு-வரிசை என்ற பெயரில் வெளியிட முனைந்து முதல் நூலாக,
தமிழக வரலாறு.சங்க காலம்-அரசர்கள்
என்ற இந்த நூலை தமிழ்கூறு நல்லுலகத்தின் முன் படைக்கிறோம்.
"மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம் புகழ் கிறி இத் தாம் மாய்ந்தனரே"
என்ற புறநானூற்று மொழிகளுக்கேற்ப, புகழுடம்பு பெற்று விட்ட புலவர் பெருந்தகை, இறவாத புகழுடைய இலக்கியங்கள் பலவற்றைத் தமிழன்னைக்கு அணி செய்ய அளித்து விட்டுச் சென்றுள்ளார். புலவர் அவர்களின்