உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

39

 யூரை, "அர்கரு" என்றும் குறிப்பிட்டுள்ளார். அவர்க்கு அரை நூற்றாண்டு கழித்து வாழ்ந்த "தாலமி" என்பார், புகாரை "கபெரீஸ்" என்றும், உறையூரை "ஒர்துரா ரெகியா சோரநடி" என்றும், நாகையை "நிகாமா" என்றும் குறிப்பிட்டுள்ளார். "மிலிந்தா அரசனுடைய கேள்விகள்" என்ற, கி. பி. முதல் நூற்றாண்டில் எழுதப் பெற்ற, புத்த நூல், "கோளப்பட்டினம்" என்ற ஒன்றைக் குறிப்பிடுகிறது.

வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி பாய்வதால், ஒருவேலி நிலம் ஆயிரம் கலம் நெல்விளையும் எனவும்,1 "ஒரு யானை படுக்கும் அளவான சிறிய இடம் ஆயிரம் யானைகளைப் புரக்கும் நெலலை விளைவிக்கும்2 எனவும் பாராட்டப்பெற்று, இன்றும் தென்னாட்டு நெற்களஞ்சியமாக சோழநாடு விளங்குவதால், அது "காவிரி நாடு" எனவும், "காவிரி சூழ்நாடு" எனவும், "காவிரி புரக்கும் நடு" எனவும் அழைக்கப்பெறும்.

'காவிரி கடலோடு கலக்குமிடத்தில் அமைந்த புகார், கடல் வாணிபத்தால் சிறந்து விளங்கிற்று. காற்றின் இயக்கத்தால், கடல்வழி வந்த கலங்கள் கொணரும் குதிரை போன்றவற்றை இறக்குவதும், பொதியமலையில் வளர்ந்த அகில், ஆரம்போலும் மரங்களையும் முத்துக்களையும் அக்கலங்களில் ஏற்றுவதும் இரவுபகல் ஓயாது நிகழ்ந்து கொண்டிருக்கும்.

அரசாட்சியின் தலைநகராம் உறையூரில் மகதச் சிற்பரும்; மராட்டக் கொல்லரும் யவனத் தச்சரும் வந்து வனப்புற வனைந்த அரசன் பெருங்கோயில் முதலாயின விளங்கும். நால்வகைப் படைவீரர், உழவர், மருத்துவர், காலக்கணிதர், மறையோர், பல்வேறு வணிகர், முத்துக் கோப்போர் போலும் பல்வகைத் தொழிலாளர்,