5. திருவதிகை ஈடுபாடு
AeAMMAeMMMMeeMMAMAeeAMeMAMAMAMeeeMAMMAMMAMAMMAMAMMMMMMAMAeeAeAMAMS
திருநாவுக்கரசரின் திருவதிகை ஈடுபாடு தனிப்பெருமை வாய்ந்தது. இதற்குக் காரணங்கள் உள்ளன. திருவதிகை வீரட்டானம் சிவபிரான் வீரச் செயல்புரிந்த எட்டுத் திருத்தலங்களுள் ஒன்று. அது மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றினாலும் சிறப்புடையது. இந்த மூன்றும் பக்தர்கட்கு முக்கியமானவை என்பதை,
மூர்த்திதலம் தீர்த்தம்
முறையால் தொடங்கினர்க்கோர்
வார்த்தைசொலச் சற்குருவும்
வாய்க்கும் பராபரமே.”
என்று தாயுமானவர் குறிப்பிட்டு விளக்கியுள்ளார். ஆகவே, திலகவதியார் அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு தவம் இயற்றினார் என்று கருதலாம். இவர் திரு வீரட் டானேசுவரரின் திருவடியில் வணங்கி மாசில்லாத் திரு நீறும் கண்டிகையும் ஆன சிவச்சின்னம் தாங்கிப் பொங்கி யெழும் அன்பு மேலெழத் தம் கைகளால் இறைவனை அணுகச் செய்யும் திருப்பணிகள் பல புரிந்து வருகின்றார். பொழுது புலர்வதற்கு முன்னுள்ள வைகறைப் பொழுதில் கோயிலின் முன் திருவலகிடும் பணியாற்றுகின்றார். ஈன்று
1. தா. பா, பராபரக்கண்ணி.156