பக்கம்:நாவுக்கரசர்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 நாவுக்கரசர்

பத்து நாட்கள் கழிந்ததும், மலடு, சினை முதலிய குறை யற்ற நலம் நிறைந்த பசுவின் சாணத்தால் இடைவெளியோ புள்ளியோ தென்படாமல் மெழுகிடுதல், நந்தவனத்தி லுள்ள நறுமலர்களைக் கொய்து மாலையாக்கிக் கொடுத் தல், இறைவனின் திருநாமங்களை ஏத்துதல், திருவிளக்கிடு தல் போன்றவை இவர் மேற்கொண்ட பணிகள்.

திருவதிகை அக்காலத்தில் கல்வி நலன் சான்ற பெரியோர்கள் வாழ்ந்த நகரமாகத் திகழ்கின்றது. சைவ சமயப் பெரியார்களைத் தவிர சமணரும் பெளத்தரும் தத்தம் சமய நெறிகளைப் பரப்பிக் கொண்டிருக்கின்றனர். அரசன் எவ்வழியோ குடிகளும் அவ்வழி’ என்ற உண்மை எக்காலத்திற்கும் பொருந்தும் பொன் மொழியன்றோ? காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த சமண வேந்தன் மகேந்திரவர்மனின் ஆட்சி தொண்டை மண்டலம் முழுவதும் பரவியிருந்ததால் சமணரின் செல்வாக்கும் சமண நெறியின் தாக்கமும் தலை தூக்கி யிருந்த காலம் அது. நீதி நூற்பயிற்சியும், தமிழ் இலக்கணத் தில் ஆழ்ந்த புலமையும், அளவியல் (தர்க்க) வாதத்தில் மிக்க திறமையும் வாய்ந்தவர்கள் சமணர்கள். ஆகவே, கல்வித்துறையிலும் சாத்திர் ஆர்வத்திலும் விருப்பமுள்ள மருள் நீக்கியார் சமணசமயப் பெரியார்கள் கூடும் இடங் களிலெல்லாம் கலந்து அவர்தம் சமயச் சொற் பொழிவு களைக் கேட்கும் வாய்ப்புகளை அதிகம் பெற்றிருந்தமை பால் இவர் மனம் சமண நெறிகளில் செல்லலாகின்றது. வாழ்க்கை நெறிகளில் பெற்றோர்களின் மறைவும் திருவதிகைப் பெரு மா னி ன் சேவையிலீடுபட்டுத் தம்பியைக் கவனிக்க முடியாத திலகவதியாரின் நிலையும் மருள் நீக்கியாருக்கு வேறு போக்கில்லாமல் அறிவுப்பசி தீர்க்கச் சமணர் வழியே பொருத்தமாகவும் அமைகின்றது. மதி நுட்பமுள்ள ஓர் இளைஞன் தமது நெறியில் பேரார்வம் காட்டுவதைக் கண்ட சமணத் துறவிகள் விரைவில் அவரைச் சிறந்த புலவராக்கித் தருமசேனர் என்ற பெயரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/87&oldid=634443" இலிருந்து மீள்விக்கப்பட்டது