பக்கம்:நாவுக்கரசர்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவதிகை ஈடுபாடு 45

நல்கி, மேன்மைதங்கிய ஆசாரியபட்டமும் வழங்கி பெரு மதிப்பு தந்துவிடுகின்றனர். தருமசேனர் தம் வாழ்க்கை யைப் பெரும்பாலும், அண்மையிலுள்ள பாடலிபுரத்தில்’ கழிக்கின்றார்.

இங்ஙனம் தமது சமய மாற்றத்திற்கு வாய்ப்பளித்த திருவதிகை மீண்டும் இறைவனால் தடுத்தாட் கொள்ளப் பெறுவதற்கும் சிறந்த இடமாகவும் அமைகின்றது. தம்பியின் நிலையை அறிந்த தமக்கையார் தாமும் ஒரு விதத்தில் அதற்குக் காரணம் என்பதையும் உணர்கின்றார். தம்பியின் வாழ்வுக்குத் துணை நிற்காமல் கோயில் பணியே தஞ்சமென்று கருதினமைதான் தம்பி பட்டிமேய்ந் தமைக்குக் காரணமாகியது என்பது அ வ ரு க் கு த் தெளிவாகப் புலனாகின்றது. அருமைத் தம்பி திரும்பவும் சைவநெறிக்கு வரவேண்டுமென்று தி ரு வ தி ைக ப் பெருமானை இரவும் பகலும் இடைவிடாது இறைஞ்சு கின்றார். சூலை நோய் தந்து தம்மிடம் வருமாறு செய்த இறைவன் திருவருட் செயலை வியந்து போற்றுகின்றார். இக்காரணங்களால் நாவுக்கரசர் திருவதிகைப் பெருமான் மீது அதிக ஈடுபாடு காட்டுகின்றார். இப்பெருமானைப் பதினாறு செந்தமிழ்ப் பதிகங்களால் பாடிப் பரவிப் போற்றுகின்றார்.

‘கூற்றாயினவாறு (6. 98), சுண்ண வெண்’ (4, 2), வெறிவிரவு’ (6, 3) என்ற பதிகங்களின் ஒவ்வொரு பாடலும் முன்னரே காட்டப்பெற்றது; இவற்றுள் சிலவற்றையும் எஞ்சிய பதின்மூன்று பதிகங்களின் ஒவ்வொரு பாடலையும் ஈண்டுக் காட்டுவேன்.

சலம்பூ வொடுது பமறந் தறியேன்:

தமிழோ டிசையா டன்மறந் தறியேன்: கலந்தீங் கிலுமுன் னைமறந் தறியேன்:

உன்னா மமென்னா வின்மறந் தறியேன்;

  • பாடலிபுரம் என்பது இக்காலத்தில் உள்ள கடலூர்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/88&oldid=634444" இலிருந்து மீள்விக்கப்பட்டது