பக்கம்:நாவுக்கரசர்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 நாவுக்கரசர்

உலந்தார் தலையிற் பலிகொண் டுழல்வா

யுடலுள்ஸ்ரீசூ லைதவிர்த் தருளாய்: அலக்தேன் அடியேன் அதிகைக் கெடில . f.

விரட்டானத் துறை மானே. 6-8) 4.18

“புனிதநீர், பூவோடு தூபமும், தமிழோடு இசை பாடலும் மறந்தறியாத நான் நலந்தீங்கிலும் உன் நாமத்தை மறந்தறியேன்” என்று தமக்கும் இறைவனுக்கும் இடையேயுள்ள தொடர்பினையும், கடமையில் தவறாமை யையும் சுட்டிக் காட்டித் தன் சூலை நோயைத் தீர்த் தருளுமாறு இறைஞ்சுகின்றார்.

கட்டவிழ்த்து விடப்பட்ட யானை திருநாவுக்கரசரை நோக்கி வரும்போது பாடிய பதிகத்தில் (4, 2), -

மடமான் மறிபொற் கலையும் மழுப்பாம்

பொருகையில் வீணை

குடமால் வரையதிண் டோளுங்

- குனிசிலைக் கூத்தின் பயில்வும்

இடமா றழுவிய பாக

மிருகில னேற்ற சுவடும்

தடமார் கெடிலப் புனலுமுடையார்

ஒருவர் தமர்காம் அஞ்சுவ தியாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை. (4. 2: 4)

என்பது நான்காம் பாடல்: சிவபெருமானின் அடியார் நாம். நாம் அஞ்சுவதற்கு யாதொன்றும் இல்லை; எம்மை எதிர் நோக்கி அஞ்ச வருவதற்கும் ஒன்றும் இல்லை’ என்று தம் பக்தியின் நெஞ்சுரத்தைக் காட்டுகின்றார்.

“முளைக்கதிர்” (4.10) என்ற முதற்குறிப்புடைய பதிகத்தில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/89&oldid=634445" இலிருந்து மீள்விக்கப்பட்டது