பக்கம்:நாவுக்கரசர்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவதிகை ஈடுபாடு 47

கிடந்தபாம் பருகுகண் டரிவை பேதுறக் கிடந்தபாம் பவளையோர் மயிலென் றையுறக் கிடந்தநீர்ச் சடைமிசைப் பிறையும் ஏங்கவே கிடந்துதா னகுதலைக் கெடில வாணரே. (8)

என்பது எட்டாவது பாடல். இதில் சிவபெருமானின் கழுத்தில் கிடக்கும் பாம்பைக் கண்டு அருகிலுள்ள பார்வதி தேவியார் அஞ்ச, பாம்போ தேவியை மயிலென்று எண்ணி மருள்கின்றது; பாம்பைக் கண்டு பிறையும் ஏங்குகின்றது; நக்கபிரான் இதனைக் கண்டு நகுகின்றார்’ என்கின்றார் நாவுக்கரசர். கற்பனை நயம் நம் கருத்தைக் கவர்கின்றது. “இரும்பு கொப்பளித்த’ (4. 24) என்ற முதற் குறிப்புடைய செந்தமிழ்த் திருநேரிசை மாலையில்,

தொண்டை கொப் பளித்த செவ்வாய் துடியிடைப் பரவை யல்குற் கொண்டைகொப் பளித்த கோதைக்

கோல்வளை பாக மாக வண்டுகொப் பளித்த தீக்தேன்

வரிகயல் பருகி மாந்தக் கெண்டைகொப் பளித்த தெண்ணிர்க்

கெடிலவி ரட்ட னாரே. (10)

என்பது பத்தாம் பாடல். இப்பதிகத்தின் பத்துப் பாடல் களிலும் கொப்பளித்தல்’ என்னும் சொல்லைப் சொற் பொருட்பின் வருநிலை அணியாக அமைத்துப் பாடுதலால் இது கொப்பளித்த திரு நேரிசை’ என்று வழங்குகின்றது. பாடல்களைப் பாடுங்கால் நம்முடைய பக்தியுணர்வும், கொப்பளித்து நிற்றலைக் காணலாம்.

வெண்ணிலா மதியம்’ (4. 25) என்ற செந்தமிழ்த் திரு நேரிசை மாலையில்,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/90&oldid=634447" இலிருந்து மீள்விக்கப்பட்டது