பக்கம்:நாவுக்கரசர்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 நாவுக்கரசர்

எல்லியும் பகலு மெல்லாம்

துஞ்சுவோர்க் கொருவர் வந்து புல்லிய மனத்துக் கோயில்

புக்கனர் காமன் என்னும் வில்லிஐங் கணையி னானை

வெந்துக நோக்கி யிட்டார் அல்லியம் பழன வேலி

அதிகைவீ ரட்ட னாரே (8) என்பது எட்டாவது தமிழ் மணம் கமழும் வாடா நறுமலர். இதில் காமனை எரித்த வீரச் செயல் குறிப்பிடப்பெறு கின்றது. மூன்று, ஐந்து, ஆறாம் பாடல்களில் யானைத் தோலை உரித்துப் போர்த்த வீரச்செயல் குறிப்பிடப் பெறுகின்றது. வீரட்டத் தலமாதலால் வீரச்செயல்களை விதந்தோது கின்றார் போலும். இது நிமலனை நித்தமும் விதிப்படி நினையுமாறு நெஞ்சுக்கு அறிவுறுத்தும் பதிகம். “நம்பனே எங்கள்’ (4, 26) என்ற செந்தமிழ்த் திரு நேரிசைப் பதிகத்தில், -

அஞ்சினால் இயற்றப் பட்ட

ஆக்கைபெற் றதனுள் வாழும் அஞ்சினால் அடர்க்கப்பட்டிங்

குழிதரும் ஆத னேனை அஞ்சினால் உய்க்கும் வண்ணம்

காட்டினாய்க் கச்சந் தீர்ந்தேன்; அஞ்சினால் பொலிந்த சென்னி

அதிகைi ரட்ட னாரே. (5): என்பது ஐந்தாம் பாசுரம். பாடல்கள் யாவும் பக்திச் சுவை கொப்புளிக்கச் செய்பவை.

2. முதலடியில் அஞ்சு என்பது ஐம்பூதங்கள்; இரண்டாம் அடியில் அஞ்சு என்பது ஐம்புலன்கள்; மூன்றாம் அடியில் அஞ்சு என்பது நமசிவாய’ என்ற ஐந்தெழுத்து மந்திரம்: நான்காம் அடியில் அஞ்சு என்பது ஐந்து தலைகள் (சிவபெருமானுக்கு ஐந்து தலைகள் உண்டு என்பது நாம் அறிந்ததே).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/91&oldid=634448" இலிருந்து மீள்விக்கப்பட்டது