உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

 நாழிகைக்கணக்கர் கணிகையர் ,கூத்தர்3 போலும், பல்வேறு வகையினர்க்கு எனத் தனித்தனி அமைந்த தெருக்கள். இருந்தன. சோழ நாடு, நகரங்களின், பெருமைகள் இவை.

அகத்தியர் வேண்ட, காவிரி ஆற்றைத் தோற்றுவித்தவன் எனவும், அரசர் குலத்தை எல்லாம் அழித்து வந்த, பரசுராமனுக்கும் தப்பி உயிர் வாழ்ந்தவன் எனவும் கூறப்படும் "காந்தமன்," பரசுராமன் கண்ணில் படாமல் மறைந்து கொண்ட காந்தமன் வேண்ட, சோழ நாட்டைச் சில காலம் ஆண்டவன் எனவும், "மருதி" என்பவள்பால், தவறாக நடந்து கொண்ட தன் இளைய மகனைக் கொன்று நீதி வழங்கியவன் எனவும், தன் தம்பியின் இறப்பிற்குக் காரணமாக இருந்த மருதியைப் பழிதீர்க்க முனைந்த தன் மூத்த மகனையும் கொன்று நீதி வழங்கியவன் எனவும் கூறப்படும் 'சுகந்தன்',வல்லுாறுஎன்ற பறவையால் துரத்தப்பட்டுத் தன்பால் அடைக்கலம் புகுந்த புறாவுக்காக, துலை புகுந்து உயிர் விட்ட பெருமைக்கு உரியவன் எனப்படும். "சிபி" அமரர்க்கும், அவுணர்க்கும் நடை பெற்ற போரில், அமரர்க்குத் துணையாகப் போரிட்டு வென்று, அதற்குக் கைமாறாகக் காவல் பூதத்தைக் கொண்டுவந்து, புகார் நகரத்து நாற்சதுக்கத்தில் நிறுத்தியவன் எனப்படும் "முசுகுந்தன்", தேரோடும் வீதியில் தேரோட்டிச் செல்லும்போது, தானே வந்து வீழ்ந்து தேர்ச்சக்கரத்தில் சிக்குண்டு இறந்து போன தன் கன்றிற்கு நீதிகோரி வந்து முறைகேட்ட பசுவிற்காகத் தன் மகனைத்தேர் ஏற்றி, நீதி வழங்கிய "மனு", வானத்தில் தொங்கிக் கொண்டு வானவர்க்குத தொல்லை கொடுத்திருந்த கோட்டைகள் மூன்றினை