உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

173

அரசுரிமைப போரில், தாயத்தாரால் விரட்டப்பட்ட, அரியணைக்கு உரிய இளவரசன், திருக்கண்ணனிடம் அடைக்கலம் புகுந்தான். அச் சோழர் குல இளவலை கேடொன்றும் கேராவண்ணம் தன்னுடைய அரண் சூழ்ந்த முள்ளூர் மலையிடத்தே வைத்துக் காத்தான். திருக்கண்ணன். பகைவரை அழித்து, இளவரசனை சோணாட்டிற்கு அரசனாக்கினான். சோணாட்டு மக்கள் மனத்துயர் துடைத்தான். ‘கடுமையான கோடையின் கொடுமையில் வருந்திய மக்களின் துயர் தீர்க்க வந்த பெருமழையைப் போல திருக்கண்ணன் துயர் துடைக்க வந்தான்’ என புலவர் மாறோக்கத்து நப்பசலையார் அவன் சிறப்பைப் போற்றியுள்ளார்.197

77. மல்லிகிழான் காரியாதி

மல்லி என்ற நாட்டின் தலைவன். மல்லிநாடு இன்றைய திருவில்லிப்புத்தூர் பகுதியைச் சார்ந்தது. மல்லிநாட்டுப்புத்நூர் என்ற சொல்லே மல்லிப்புத்தூர் எனவும். வில்லிப்புத்தூர் எனவும் மருவியிருக்கக்கூடும் என்பார் சிலர். கல்வெட்டுக்கள் திருவில்லிப்புத்துரை மல்லி நாட்டு திருவில்லிப்புத்துார் என்றே குறிப்பிடுகின்றன.

மல்லிநாடு அரண் மிகுந்த நாடு, காரியாதி சிறந்த கொடை வள்ளல் வருவோர் அனைவருக்கும் வெண் சோறு வழங்கி மகிழும் தன்மை கொண்டவன் என்பார் புலவர் ஆவூர் மூலங்கிழார்198