உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9. குறுநில மன்னர்களும்
தலைவர்களும்

பண்டைத் தமிழகத்தில், முடியுடை மூவேந்தரான சேர, சோழ, பாண்டிய அரசர்களே மட்டுமல்லாமல், அதியமான் நெடுமான் அஞ்சி போலும் வள்ளல்களே அல்லாமல், அம் மூவேந்தர்களுக்கு அடங்கியும் அடங்காமலும் வாழ்ந்த குறுகில மன்னர்களும், குறுநிலத் தலைவர்களும் இருந்துள்ளனர். இவர்கள் ஓரினத்தைச் சார்ந்தவர் அல்லர். இவருள்,பிற நாட்டிற் பிறந்து, தமிழ்நாடு போந்து வாழ்ந்தாரும் உள்ளனர். ஆனால் அவர்கள் அனைவருமே, தமிழ் மொழியைத் தம் தாய் மொழியாகக் கொண்டவர், தமிழ் மண்ணின் வளர்ச்சியில் கருத்துடையவர் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. அவர்கள் வரலாற்றை, அவர்களின் பெயர் கூறும் அகர வரிசையில் காணலாம்.

1. அகுதை

இவனைப் பாடிய புலவர்கள், கபிலர்; கல்லாடனார்2, பரணர்3, வெள்ளெருக்கிலையார்4 ஆகிய நால்வராவர்.

இந்நால்வர் பாடிய ஐந்து பாக்கள் மூலம் இவன் வரலாறாக அறியத் தக்கன இவை: கூடல் நகரில் வாழ்ந்தவன்.5 போர் ஒன்றில், பகைவர் ஏவிய திகிரிப்