174
78. மாவன்
மையல் என்ற நகரத்துக் கோமான். நிலை பெற்ற வருவாயை உடையது அவ்வூர். பாண்டிய அரசன் ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியனின் துணைவர்களுள் ஒருவனாக விளங்கியவன்199
79. மிஞிலி
விற்படையும், தேர்ப்படையும் கொண்ட பெருவீரன். வஞ்சினம் வழுவாது முடிக்கும் வன்மையுடைவன். கொண்கான நாட்டு நன்னனின் பகைவனாக விளங்கியவன் மிஞிலி. 'வாய்மொழி மிஞிலி' என வரும் அடைமொழி கொண்டு அவன் கோசர் இனத்தவனாயிருக்கக் கூடும்' என்பார் சிலர். அது ஒன்றையே கொண்டு அவனைக் கோசன் எனக் கோடல் பொருந்தாது.
நன்னனுக்குரிய பாழி மீது போர் தொடுத்தான் மிஞிலி. மிஞிலியை எதிர்த்துப் போரிடத் தயங்கினான். நன்னன் அவனுக்குத் துணையாக்: அவன் நண்பன் வாகைப் பெருந்துறைத் தலைவன் ஆய் எயினன், களம் புகுந்து மிஞிலியை எதிர்த்தான். ஆய் எயினனின் பேராற்றலை உணர்ந்தவன் மிஞிலி, ஆகவே பாழி நகர்க்கண் இருந்த பேயைப் பரவி "எயினனைக் கொன்று வென்று வருவனேல், வழங்குவேன் நினக்கும் பெரும் பலி" என வேண்டி, வணங்கிக் களம் புகுந்தான், என்பர் புலவர்.
கடும் போர் நிகழ்ந்தது, இறுதியில் நண்பன் நன்னனுக்குத் துணையரக வந்து போரிட்ட ஆய் எயினன் வீழ்ந்தான்200 நன்னனுக்குரிய பாரம் என்ற ஊர் மிஞிலிக்கு உரிமையானது.201