உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170

71 புன்றுறை

சேர வேந்தன் கணைக்கால் இரும்பொறையின் படைத்தலைவருள் ஒருவன். கழுமலம் எனும் இடத்தே சேரமன்னனுக்கும் சோழ வேந்தனுக்கும் இடையே நடந்த பெரும் போரில், சோழர் படைத் தலைவன் பழையன் என்பானோடு போரிட்டு உயிர்துறந்தவன்.186

72. பொகுட்டெழுனி

தகடூர் ஆண்ட அதியர் மரபினன்187 “நெல்லி அமிழ்து விளை தீங்கனி ஒளவைக் கீந்த” அருங் கொடை வள்ளல் அதியமான் நெடுமான் அஞ்சியின் அருமை மகன். பேராற்றல் பெற்றவன். பகைவர் நாட்டை வென்று, பகை வீரர்களின் குருதியால் ஈரம் பட்ட நிலத்தை, கழுதை ஏர் பூட்டி உழுது வெள்ளை வரகும் கொள்ளும் விதைத்துப் பாழ் நிலமாக்கும் போர் வேட்கை கொண்டவன்188

அதியமான் நெடுமான் அஞ்சியின் மனறவால் நிலை குலைந்து போன நாட்டை, நிலை பெறச் செய்து புகழ்படஆண்டான்.189 தந்தையைப் போலவே, வள்ளலாக விளங்கி, பரிசிலர்க்கு வறுமை நீங்க பெரும் பொருள் அளித்தவன். ஒளவையாரால் பாராட்டப் பெற்ற பெருமைக் குரியவன்.

73. பொறையாற்றுக் கிழான் பெரியன்

சோழ நாட்டின், கடற்கரையை யடுத்த நெய்தல் வளம் நிறை நல்லூர்களுள் ஒன்று பொறையாறு, அப்பொறையாறு நகர்த்தலைவனாக விளங்கியவன்