உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வைணமும் தமிழும்.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வைணவ திவ்விய தேசங்கள்

343


பாண்டிநாட்டுத் திருப்பதிகள்–18

வெள்ளா றதுவடக்கா மேற்குப் பெருவழியாம்
தெள்ளார் புனற்கன்னி தெற்காடும்-உள்ளாரா
ஆண்ட கடல்கிழக்காம் ஐம்பத் தறுகாதம்
பாண்டிநாட் டெல்லைப் பதி.[1]

என்பது பாண்டி நாட்டு எல்லைகளைக் குறிப்பிடும் பாடல்,

1. திருமாலிருஞ்சோலைமலை  10.திருத்தொலைவில்லி மங்கலம்
2. திருக்கோட்டியூர்  11. சிரீவரமங்கை
3. திருமெய்யம்  12.திருப்புளிங்குடி
4. திருப்புல்லாணி  13.தென்திருப்பேரை
5. திருத்தண்கால்  14.ஸ்ரீவைகுண்டம்
6. திருமோகூர்  15.திருவரகுணமங்கை
7. திருக்கூடல்  16.திருக்குளந்தை
8. ஸ்ரீவில்லிபுத்தூர்  17.திருக்குறுங்குடி
9. திருக்குருகூர்  18.திருக்கோளுர்

குறிப்பு: நவதிருப்பதிகள் திருக்குருகூர் (9), திருக்கோளுர் (18), தென்திருப்பேரை (12) ஆகிய மூன்றும் பொருநையாற்றின் தென்கரையில் இருப்பவை. ஸ்ரீவைகுண்டம் (3) வரகுணமங்கை (15) திருக்குளந்தை (16) திருப்புளியங்குடி (14) தொலைவில்லி மங்கலம் (10) இது-இரட்டைத் திருப்பதி- ஆகிய ஐந்தும் பொருநையாற்றின் வடகரையில் உள்ளவை. தொலைவில்லி மங்கலம் 18-கணக்கில் ஒன்றாகவும் நவதிருப்பதி கணக்கில் இரண்டாகவும் கருதப்பெறும்.


  1. 2. ஒரு பழம் பாடல்