பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 த. கோவேந்தன்

அகரக்கூறும் சேர்ந்த சந்த அக்கரம் அல்லது ஈரொலி உயிர் (Diphthong) ஆம்; தமிழில், அகர இகரக் கலவையே ஆயினும் இயற்கையான ஒரொலியுயிராகவே ஒலிக்கும் இரண்டு ரெண்டு என ரகரத்தின் அகரத்தோடு முன்னின்ற இகரம் மருவி 'ரெ என வரும்போது எகரம் தோன்றக் காண்கிறோம்

வம்பன் வம்பென்; விலை வெலை; சுவர் > செவர்; தலை> தலே; யந்திரம் எந்திரம் என முறையே அ, இ, உ, ஐ, ய என்பவற்றின் மரூஉ ஒலியாக எகரம் வரக் காண்கிறோம் வந்தனென்> வந்தனன், மென்று> மொன்று எண்ணெய் எண்ணை என முறையே அ, ஒ, ஐ என எகரம் மருவி வரவும் காண்கிறோம் செட்டி> எட்டி என்று சிலர் கொண்டால் செ> எ என்றாயிற்று எனல் வேண்டும்; ச என்ற முதல் கெட்டது எனலே மேல் இன்றும் சிங்களத்தில் வழங்கும் ச என்ற பழைய திராவிட உயிர் ஒலியே ய எனத் தமிழில் வழங்கும் என்பர் (பார்க்க : அ).

அவன், இவன், உவன், எவன் என்ற முறையில் சுட்டு, வினா அடியாகப் பிறக்கும் சொற்கள், நந்நான்காக அமைகிற அழகினைப் பாராட்டாதவர் இல்லை எல், என் (என்+கு எங்கு) முதலியவற்றின் அடிச்சொல்லாக எகரமே எஞ்சுகிறது; ஏ என்பதே பழைய வடிவம் போலும் /

எகரம் மொழிக்கு முதலில் பெரும்பான்மை வரும்; சிறுபான்மை இடையில், முன்னாளில் வந்த வழக்கு அருகியது கடையில் அளபெடையில் மட்டுமே வரும்

எகரம் வினா எழுத்து, எவன் என அகவினாவாகவும், எக் கொற்றன் எனப் புறவினாவாகவும் வரும்

எ என்பது ஏ என்ற நெடில் ஒலியாகவும், இதன் மேல் புள்ளி வைத்தெழுதினால் 'எ' என்ற குறில் ஒலியாகவும் தொல்காப்பியர் காலத்தும், நன்னூலார் காலத்தும் ஒலித்து வந்ததாம் கூரம் செப்பேட்டில் எடுத்து, ஏரி