தன் இரக்கம் 139 திறமை உடையவர்களாய் இருக்கமாட்டார்கள். அவர்கள் காலம் முழுவதும் இப்படியாகி விட்டதே! என்று ஏங்குவதிலேயே கழிந்து போகுமேயொழிய, இத்துன்பத்தைத் தவிர்க்க முயற்சி செய்வோம் என்ற எண்ணம் எழ அவர்களுக்கு அவகாசம் கிடைக்காது. இராவணன் பெருமையின் மாட்சியை நமக்கு அறிவுறுத்தக் கவிஞன் அவனுடைய இப்பண்பை விளக்கினான்; ஆனால், எதிர்பாராத முறையில் இராவணனது திறனின்மையையே குறிப்பிட்டு விட்டான் என்று எண்ணத்தோன்றுகிறதல்லவா? இவ்வாறு நாம் இடர்ப்படுவோம் என்பதைக் கம்பன் கருதாமலில்லை; 'இராவணன் தன்னம்பிக்கை யுடையவன், செயல் புரிதலில் சமர்த்தன்' என்பதையும் வற்புறுத்தியிருக்கிறான்; அவனிடத்தில் நாம் கண்ட 'தன்னிரக்கம் காரணமாக, நாம் ஏற்றக்கூடிய 'திறனின்மையைச்' சரிக்கட்ட அவனுடைய 'தன்னம்பிக்கை' எல்லையற்றது என எடுத்துக் காட்டுகிறான். எல்லையற்ற வர பலமும், தவ வன்மையும், உடல்வன்மையுமே இராவணன் தன்னம்பிக்கையின் அடித்தளங்கள். இவ்வடித்தளங்களைக் கொண்டு, 'தன்னம்பிக்கை' என்ற கோட்டையை அவன் மிகப் பலமாகக் கட்டிவிட்டிருக்கிறான் என்பதைக் கம்பனே 'அமர்பொருமேல், வெல்லும் அத்தனை அல்லது தோற்றிலா விறலோன் எனக் குறிப்பிடுகிறான். இராவணனே இவ்வாறு சொல்லியிருந்தால், நாம் அவன் கூற்றை முழுவதும் நம்ப மனமொப்ப மாட்டோம். அதையறிந்தே ஆசிரியனே இதனைக் குறிப்பிடுகிறான். இதனால், பின்னர், இராவணன் தன்னுடைய குறைகளை உணர முடியாத அளவுக்குத்
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/156
Appearance