பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் தன்னம்பிக்கை கொண்டிருத்தலை அவன் எடுத்துக் காட்டுவதைப் பொருத்தமுடையது என்றே நம்மால் ஏற்றுக்கொள்ள முடிகிறது. எச்செயலையும் சிறப்பொடு செய்து முடிக்கத் 'தன்னம்பிக்கை' இன்றியமையாததே. நம்மால் கூடுமா, கூடாதா!' என்ற ஐயத்தோடு செயலில் இறங்குபவன், மடியில் பூனையை வைத்துக்கொண்டு சகுனம் பார்ப் பவனையே ஒப்பான், அவனால் எதையும் செய்து முடிக்க முடியாமல் போய்விடும். இஃது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மையே தன்னம்பிக்கை' யின் மிகுதியால் மனிதன் எடுத்த செயலைச் சரிவரச் செய்து முடிக்காமல் திகைப்பதும். இராவணன் பின்னர்க் குறிக்கப்பட்ட பிழையைச் செய்து மடிகிறான். போர் மூண்டால் தோல்வி நிச்சயம் என்று எத்தனையோ ஏதுக்களை எடுத்துக்காட்டினான் வீடணன். ஆனால், இராவணன் தன்னிடத்துக் கொண்டிருந்த எல்லையற்ற நம்பிக்கை, வீடணன் சொற்களில் பொதிந்து கிடந்த உண்மைகளை உணர முடியாமற் செய்துவிட்டது. வாலியை வென்றவன் இராமன் என வீடணன் காட்டியதற்கு இராவணன் சமாதானம் கூறுவதால் இதனை அறிகிறோம். அரங்கில் ஆடுவார்க்கு அன்பு பூண்டு உடைவரம் அறியேன் என்பதே இராவணன் வாதம். தான் தோல்வியுற்றதைக் கருதாமல், தோல்விக்குக் காரணமாய் இருந்த வாலியின் வர பலத்தை இராவணன் குறிப்பிடுவதிலிருந்து, அவன் தன் வலிமை வாலியினுடைய வலிமைக்குக் குறைந்ததாகாது எனக் கருதுகிறான் என்பது விளக்கமடைகிறது. இக்கூற்று ஒப்புக்கொள்ளக் கூடியதேயானாலும், இஃது