தன் இரக்கம் 141 உண்மையில் மிகையே என்பதில் ஐயமில்லை. ஆனால், அவனைச் சிறந்த பலவானாகச் செய்ததற்குக் காரணமான வரங்களை அளித்தவனும், அவனால் பூசிக்கப் பெற்றவனுமாகிய சிவபெருமானே எதிர்த்தாலும் தான் வெற்றி பெறக்கூடும் என்று அவன் கருதியது அறிவுடைமையாகாது. சிவபெருமான் வீற்றிருந்த கயிலையை எடுக்க முடியாமல் இடர்ப்பட்ட இராவணனே இவ்வாறு கூறினான் என்றால், அவன் 'தன்னம்பிக்கை அவனுடைய அறிவை அறவே மழுங்கச் செய்துவிட்டது என்பதன்றி வேறென்ன சொல்லக்கூடும்! இராவணன் இவ்வளவு நிச்சயமாகத் தரன் வெற்றியையே அடைய முடியும் என்று எண்ணியிருந்த தற்கு அவனுடைய வர பலங்களே காரணம். இதை நன்கு உணர்ந்திருந்த வீடணன், மானுடரை வெல்ல அவன் வரம் பெறவில்லை என்பதை எடுத்துக் காட்டினான். இராவணனுடைய தன்னம்பிக்கை இக்குறையையும் பொருட்படுத்த இசையவில்லை. தேவர் முதலியோரைத் தோற்கடிக்கப் பெற்ற வரத்தில், மானுடரையும் தோற்கடிக்கக் கூடிய தகுதி அடங்கியிருப்பதாக அவன் கருதி விட்டான்! இராவணன் தன்னுடைய குறைகளை உணர வொட்டாமற்செய்த அவன் 'தன்னம்பிக்கை, மாற்றார் பெருமையையும் வலியையும் உணரவொட்டாமற் செய்துவிட்டது. தன்னைத் தோற்கடித்த வாலியை வென்றவன் இராமன் என்று கருதவே அவனுக்கு விருப்பமில்லை. 'வாலியை மறைந்தல்லவா கொன்றான்? என்று எள்ளிப் பேசுகிறான். ஒரு குரங்கு செய்த அட்டூழியங்களுக்கு மனமுடைந்து வருந்தியவன்! சாரன், அண்ணலே, விண்ணின்
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/158
Appearance