தன் இரக்கம் 137 பொழுதும் அவன் வள்ளுவர் வழியைப் பின்பற்ற வில்லை. வாழ்க்கையை இன்பமுடையதாகக் கழிப்பதற்காக வள்ளுவர் வழி கூறினார். இராவணன் இன்பந்துய்ப்பதையா வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டிருந்தான் உயர்ந்தோன் என்று உலகோரால் போற்றப்படவேண்டும் என்பதன்றோ அவன் லட்சியம்? அவன் காமம் காரணமாக நெறியல்லா நெறியிலே சென்று விட்டான். சுயமதிப்புக்குப் பங்கம் நேரிடாதபடி, பின்னடையக் கூடாத அளவுக்குச் சென்றுவிட்டான். இனித் தன் நோக்கம் நிறைவேறு வதற்குவேண்டியவற்றைச் செய்யினும், தன் போக்கை மாற்றிக்கொள்ளினும், பழியே வரும் என்பதையும் உணர்ந்தான். ஆகவேதான், பழியைத் தேடித் தந்த தன்நோக்கமாவது முற்றுப் பெறட்டும் என்று எண்ணி, அதற்கு ஆவன செய்வதில் விருப்பம் காட்டினான்; பழி வந்து விட்டதே! என்று எண்ணம் தோற்றுவித்த உரனின்மை காரணமாக அதையும் செம்மையாகச் செய்து முடிக்க முடியாமல் அவதிப்பட்டான். இல்லையேல், தன்னை ஏற்றுக் கொள்ளும்படி சீதையின் கால்களில் விழுந்து இறைஞ்சிய இராவணன், அவள் மறுத்ததைக் கண்டு, திராrை புளிக்கும் என்று வெறுத்துச் சென்ற நரியைப்போல, அவளைப் பழித்துக் கூறியது பொறுத்தமற்றதாகப் போய்விடும். - - அறிவினால் அவதியடைந்த பெரியோர்களுள் இராவணன் தலை சிறந்தவனாய்க் காட்சியளிக்கிறான் தான் செய்தது தீமை என்றுணர்ந்தும், அதன் விளைவாக நிகழ்ந்த துன்பங்களைத் தடுக்க முன்வராமல், அவற்றை நினைத்து ஏங்குவதே அவனுடைய இக்குணக் கூறுபாட்டை வெளிப்
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/154
Appearance