136 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் வந்ததே அவன் பெருமைக்குச் சான்று. அங்ங்ணமிருக்க, அவன் தோல்வியடைந்தான் என்பது எவ்வாறு இரங்கத்தக்கதாகும்? ஆகவேதான், அவன் சிறிதும் கூச்சமின்றி, மிக்க பெருமிதத்துடன் தன்னைக் 'கயிலையை எடுத்தவன்' என்று தானே பாராட்டிக் கொள்ளுகின்றான். அனுமன் கவர்ந்து சென்றதும் அவர்களுடைய ஒப்பற்ற வலிமை காரணமாக அன்று: இராவணனுக்கு அவற்றைத் தடுக்கும் திறம் இல்லாமையாலேயேயாம். தீங்கு தடுக்கும் திடமில்லாதவனாய் இராவணன் மாறிவிட்டதற்குத் தீமையை வருவித்துக் கொண்டவன் தான்ே என்றுணர்ந்த அறிவே காரணம் இதை மிகவும் நன்றாக உணர்ந்திருந்தமையால்தான். இராவணன் அனுமனை எதிர்க்கவோ, அல்லது சுக்கிரீவனைத் தடுக்கவோ தான் முயற்சியொன்றுஞ் செய்யாது வாளாவிருந்தான்; அவர்கள் செயல்களால் தனக்கு நேர்ந்த பழியின் எல்லையைப் பன்மடங்கு பெரிதாகக் கருதினான்; அதை நினைத்து நினைத்து உருகினாள். இட்ட இவ்வரியணை இருந்தது என் உடல்!' என்று இராவணன் கூறியது, எவ்வளவு ஆழ்ந்த சிந்தனை யோடு கூறப்பட்டது என்பது இப்பொழுது உணர முடிகிறது. வள்ளுவர் குறளின் இன்றியமையாமையை விரும்பி நடந்துகொண்டவனைப் போலவே இராவணன் செயல் புரிந்திருக்கிறான்; அவர் ஆணைக்கு நேர்மாறாக நடந்து கொண்டானே யானாலும், தன்னை உயர்ந்தவனாகவே காட்டிக் கொண்டிருக்கிறான்; பின்னர் வருந்த நேரும் என்பதைச் சிந்தியாமல் ஒரு தீமையைச் செய்து விட்டான். அதன் பயனாக அழிவு நேரத் தலைப்பட்ட
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/153
Appearance